மாஸ் காட்டும் டி 44...ஒரே நாளில் 3 அப்டேட்...தனுஷுக்கு 3 ஹீரோயின்

சென்னை : இந்திய அளவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷ், அடுத்தடுத்து பல படங்களில் நடித்த கலக்கி வருகிறார். பல மொழிகளிலும் மாஸ் ஹீரோவாக உருவாகி உள்ளார். சமீபத்தில் தான் ஹாலிவுட் படமான தி கிரே மேன் படப்பிடிப்பை முடித்து இந்தியா திரும்பினார்.

வந்த உடனேயே கார்த்திக் நரேன் இயக்கும் டி 43 படத்தின் ஷுட்டிங்கில் பிஸியாகி விட்டார். அசுர வேகத்தில் இந்த படத்தின் ஷுட்டிங் நடத்தப்பட்டுள்ளது. இப்போது தான் படப்பிடிப்பை துவங்கினார்கள், அதற்குள் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்தி முடிக்க உள்ளனர்.

அதுக்குள் டி 44 அப்டேட்டா

அதுக்குள் டி 44 அப்டேட்டா

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர்கள் இருவருமே பத்திரிக்கையாளர் ரோலில் நடிக்கிறார்களாம். செம ஆக்ஷன் படமாக இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது. டி 43 அப்டேட் முடிவதற்குள் டி 44 படத்தின் வேலைகளை துவக்கி விட்டனர்.

தனுஷ் கதை எழுதும் படம்

தனுஷ் கதை எழுதும் படம்

டி 44 படம் ஆரம்பிக்கப் படுவதற்குள் அடுத்தடுத்து பரபரப்பாக பல அப்டேட்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழச்சியில் திணறடிக்க வைத்து வருகின்றனர். மித்ரன் ஜவஹர் இயக்கும் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனங்களை தனுஷே எழுதுகிறார். சன் பிக்சர்ஸ் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது.

எப்போது துவங்குது டி 44

எப்போது துவங்குது டி 44

டி 44 படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 6 ம் தேதி பூஜையுடன் துவங்க உள்ளதாக 2 நாட்களுக்கு முன்பு தான் கூறப்பட்டது. அத்துடன் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல நடிகைகளான ராஷி கன்னா மற்றும் நித்தியா மேனன் நடிப்பதாக கூறினார்கள். இரண்டு கால கட்டங்களில் நடப்பது போன்று இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது தான் கதையா

இது தான் கதையா

கல்லூரி காலங்களில் நடப்பது போலவும், மற்றொன்று வாழ்க்கையின் பிற்பகுதியில் நடப்பது போலவும் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். இரண்டு காலங்களிலும் நிகழும் காதல் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தான் இந்த படம் அமைக்கப்பட உள்ளதாம்.

ஒரே நாளில் 3 அப்டேட்

ஒரே நாளில் 3 அப்டேட்

இது தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அடுத்த அப்டேட்டை இன்று வெளியிட்டுள்ளனர். அதுவும் ஒரே நாளில் மூன்று அப்டேட்களை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர் படக்குழுவினர். இன்று காலை தான் டி 44 படத்தில் முன்னணி இயக்குனரான பாரதிராஜா நடிக்கிறார் என அறிவித்தார்.

மூன்றாவது ஹீரோயின் இவரா

மூன்றாவது ஹீரோயின் இவரா

இது வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த படத்தில் பிரகாஷ் ராஜும் முக்கிய ரோலில் நடிக்கிறார் என அடுத்த அப்டேட் வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து இந்த படத்தில் மூன்றாவது ஹீரோயினாக பிரியா பவானி சங்கரும் இந்த படத்தில் இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்கு பின் தனுஷ் படத்தில் அனிருத்

5 ஆண்டுகளுக்கு பின் தனுஷ் படத்தில் அனிருத்

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கிட்டதட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இதற்கு முன் தனுஷ் நடித்த மாரி படத்திற்கு தான் அனிருத் இசை அமைத்திருந்தார். அந்த படத்திற்காக இவர் இசையமைத்த ரவுடி பேபி பாடலின் யூட்யூப் சாதனையை இதுவரை எந்த பாடலும் முறியடிக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X