twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருச்சிற்றம்பலம் முதல் லவ் டுடே வரை... 2022ல் குறைந்த பட்ஜெட்டில் சூப்பர் ஹிட் அடித்த படங்கள்

    |

    சென்னை: 2022ம் ஆண்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகின.

    இதில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சில திரைப்படங்கள் வெற்றிப் பெற்றாலும், பல படங்கள் மோசமான விமர்சனங்களுடன் தோல்வியை தழுவின.

    அதேநேரம் குறைந்த பட்ஜெட்டில் உருவான சில திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தரமான வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தன. அதன் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

     OTT Exclusive: சுழல் முதல் வதந்தி வரை... 2022ம் ஆண்டில் பட்டையைக் கிளப்பிய தமிழ் வெப் சீரிஸ்கள்! OTT Exclusive: சுழல் முதல் வதந்தி வரை... 2022ம் ஆண்டில் பட்டையைக் கிளப்பிய தமிழ் வெப் சீரிஸ்கள்!

     மாஸ் காட்டிய காந்தாரா

    மாஸ் காட்டிய காந்தாரா

    2022ம் ஆண்டில் ஆர்.ஆர்.ஆர், பொன்னியின் செல்வன் போன்ற பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவான படங்களுக்கே தண்ணி காட்டியது காந்தாரா திரைப்படம் தான். யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் பொன்னியின் செல்வன் வெளியான அதே தேதியில் ரிலீஸானது காந்தாரா. ரிஷப் ஷெட்டி இயக்கி அவரே ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படத்தை கேஜிஃஎப் படத்தை தயாரித்த ஹோம்பலே ப்ரொடியூஸ் செய்திருந்தது. வெறும் 15 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், இதுவரை 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து தெறிக்கவிட்டுள்ளது. இதுதான் இந்திய பாக்ஸ் ஆபிஸில் இதுவரை எந்த திரைப்படமும் புதிய சாதனை எனக் கூறப்படுகிறது.

     இரண்டாவது இடத்தில் தி காஷ்மீர் ஃபைல்ஸ்

    இரண்டாவது இடத்தில் தி காஷ்மீர் ஃபைல்ஸ்

    இந்தப் பட்டியலில் இந்தியில் ரிலீஸான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் ரிலீஸான இந்தப் படம் 17 கோடி பட்ஜெட்டில் உருவாகி 340 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்த ஒரு படம் 340 கோடி வரை கலெக்‌ஷன் செய்தது திரையுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் கூட கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்தப் படம் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

     777 சார்லி மூன்றாவது இடத்தில்

    777 சார்லி மூன்றாவது இடத்தில்

    மேலும் ஒரு கன்னட திரைப்படமான '777 சார்லி' இந்த வரிசையில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. ரக்‌ஷித் ஷெட்டி இயக்கத்தில் 20 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 150 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். 777 சார்லி பான் இந்தியா படமாக வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தெலுங்கில் ரிலீஸான கார்த்திகேயா 2 120 கோடி ரூபாய் கலெக்‌ஷன் செய்துள்ளது. பேண்டசி திரைப்படமான இது 16 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருந்தது.

     திருச்சிற்றம்பலம், சர்தார்

    திருச்சிற்றம்பலம், சர்தார்

    இந்தப் பட்டியலில் 5வது இடத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்த திருச்சிற்றம்பலம் உள்ளது. 30 கோடி பட்ஜெட்டில் உருவான திருச்சிற்றம்பலம், மொத்தம் 110 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் தனுஷுடன் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அதேபோல், கார்த்தியின் சார்தார் திரைப்படம் 6வது இடத்தை பிடித்துள்ளது. 25 முதல் 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலித்தது. போலீஸ், ரகசிய உளவாளி என கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்த இந்தப் படத்தை பிஎஸ் மித்ரன் இயக்கியிருந்தார்.

     சீதா ராமம், லவ் டுடே

    சீதா ராமம், லவ் டுடே

    7வது இடத்தில் துல்கர் சல்மானின் சீதா ராமம் உள்ளது. 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தெலுங்கில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தமிழ், மலையாளம் மொழிகளிலும் ரிலீஸானது. துல்கர் சல்மானுடன் மிருணாள் தாகூர், கெளதம் மேனன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்திருந்தனர். தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே திரைப்படமும் இந்த லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளது. 2கே கிட்ஸ்களை குறிவைத்து உருவான இந்தப் படம் இதுவரை 90 கோடி வரை வ்சூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் 15 கோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Dhanush's Thiruchitrambalam, Karthi's Sardar, and Love Today were superhits in 2022. It is noteworthy that these low-budget films collected good collections at the box office as well.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X