»   »  திருநாளை திரளாக வந்து ரசிக்கிறார்கள் மக்கள்!- இயக்குநர் ராம்நாத்

திருநாளை திரளாக வந்து ரசிக்கிறார்கள் மக்கள்!- இயக்குநர் ராம்நாத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருநாள் படத்தை மக்கள் திரளாக வந்து ரசிக்கிறார்கள். கிராமப்புறங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று இயக்குநர் ராம்நாத் கூறியுள்ளார்.

ராம்நாத் இயக்கத்தில் நயன்தாரா, ஜீவா, ஜோ மல்லூரி உள்ளிட்டோர் நடித்த படம் திருநாள்.

கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் படம் வெளியானது. கபாலி வெளியாகி ஒரு வாரத்தில் வந்தாலும், உலகெங்கும் 600 அரங்குகளில் இந்தப் படம் வெளியானது.

Thirunal director Ramnath speaks on the movie

படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்தாலும், படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக அதன் இயக்குநர் ராம்நாத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "திருநாள் படத்துக்கு முதல் நாளிலிருந்தே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நயன்தாரா - ஜீவாவின் பாத்திரங்களை மக்கள் அந்த அளவு ரசிக்கிறார்கள். நானே நேரில் போய் பார்த்த பல அரங்குகளில் படத்துக்கு நல்ல கூட்டம்.

தமிழகத்தின் உள்ளார்ந்த மாவட்டங்களில், குறிப்பாக கதை நிகழும் திருச்சி - தஞ்சைப் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் 'திருநாள்' அதன் பெயருக்கேற்ற கூட்டத்தோடு ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தைப் பார்த்த பலர், பல காட்சிகளில் தங்களைப் பார்த்ததாக என்னிடம் கூறினார்கள். அதுதான் இந்தப் படத்துக்கான வெற்றியாகப் பார்க்கிறேன். எதிர்மறை விமர்சனங்களும் வரத்தான் செய்யும். அதுபற்றி நான் கவலைப்படவில்லை. அவர்களும் பாராட்டும்படி என் அடுத்த படைப்பைத் தருவேன்," என்றார்.

English summary
Director Ramnath says that his latest movie Thirunaal is running with packed house.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil