twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தெய்வங்களை கண் முன் கொண்டு வந்த திருவிளையாடல்...56 ஆண்டு கால பயணம்

    |

    சென்னை : பக்தி மற்றும் வரலாறு ஆகியவை கலந்த கலவையாக உருவாக்கப்பட்டு 1965 ம் ஆண்டு ஜுலை 31 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்ட படம் திருவிளையாடல். இந்த படம் ரிலீசாகி இன்றுடன் 56 ஆண்டுகள் ஆகிறது. இந்த படத்தை ஏ.வி.நாகராஜன் எழுதி, தயாரித்து, இயக்கி இருந்தார்.

    விக்ரம் படத்தில் ஆன்போர்டு.. கமலுடன் கைக்கட்டி பவ்யமாய் நிற்கும் வாரிசு நடிகர்.. வைரலாகும் போட்டோ! விக்ரம் படத்தில் ஆன்போர்டு.. கமலுடன் கைக்கட்டி பவ்யமாய் நிற்கும் வாரிசு நடிகர்.. வைரலாகும் போட்டோ!

    சிவாஜி, சாவித்ரி, நாகேஷ், கே.பி.சுந்தராம்பாள், தேவிகா, மனோரமா, டி.ஆர்.மகாலிங்கம், முத்துராமன் உள்ளிட்ட பலர் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருப்பார்கள். கே.வி.மகாதேவன் இசையில் கண்ணாதாசன், சங்கரதாஸ் சுவாமிகள் ஆகியோர் பாடல்களை எழுதி இருந்தனர்.

    திருவிளையாடலாக மாறிய சிவ லீலை

    திருவிளையாடலாக மாறிய சிவ லீலை

    64 கதைகளைக் கொண்ட திருவிளையாடல் புராணத்தில் இருந்து 4 கதைகளை தொகுத்து இந்த படம் எடுக்கப்பட்டது. திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என அனைத்திலும் வெற்றியை பெற்ற படம் திருவிளையாடல். துவக்கத்தில் இந்த படத்திற்கு சிவ லீலை என்றே பெயர் வைக்கப்பட்டது. அதற்கு பிறகு தான் திருவிளையாடல் என மாற்றப்பட்டது.

    வெள்ளி விழா கொண்டாடிய படம்

    வெள்ளி விழா கொண்டாடிய படம்

    தொடர்ந்து 25 வாரங்கள் தியேட்டர்களில் ஓடி வெள்ளி கண்ட படம் இது. சிறந்த பிராந்திய மொழி படத்திற்கான தேசிய விருதினையும், சிறந்த தமிழ் படத்திற்கான ஃபிலிம்ஃபேர் விருதினையும் திருவிளையாடல் படம் பெற்றது. 2012 ல் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அதுவும் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்றது.

    எவர்கிரீன் ஹிட்டான நாகேஷ் வசனம்

    எவர்கிரீன் ஹிட்டான நாகேஷ் வசனம்

    இப்போதும் ஒளவையார் என்று சொன்னால் அனைவரின் நினைவில் முதல் தோன்றுவது கே.பி.சுந்தராம்பாள் முகம் தான். அந்த அளவிற்கு தத்துரூபமாக பல படங்களில் ஒளவையார் வேடம் ஏற்று நடித்திருப்பார். தருமி கேரக்டரில் நடித்த நாகேஷ் பேசும் வசனங்கள் பல அவரே சொந்தமாக பேசியது. அவர் நடிக்கும் பகுதியை ஒன்றரை நாளில் நடித்து முடித்தாராம். இந்த படத்தில் நாகேஷ் பேசும் வசனங்கள் எவர்க்ரீன் ஹிட் ஆனதுடன், பல படங்களில் இந்த காட்சி பயன்படுத்தப்பட்டது.

    மாற்றப்பட்ட பாகவதர் கேரக்டர்

    மாற்றப்பட்ட பாகவதர் கேரக்டர்

    நக்கீரர் வேடத்தில் டைரக்டர் நாகராஜனே நடித்திருந்தார். பாலைய்யா நடித்த பாகவதர் ரோலில் முதலில் பாலமுரளி கிருஷ்ணா தான் நடிப்பதாக இருந்தது. பிறகு அதற்கு பாலைய்யா தான் பொருத்தமாக இருப்பார் என மாற்றப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட பாலமுரளி கிருஷ்ணா, ஒரு நாள் போதுமா பாடலை மட்டும் பாட சம்மதம் தெரிவித்தார்.

    நிஜத்தை பிரதிபலித்த செட்

    நிஜத்தை பிரதிபலித்த செட்

    இந்த படம் சென்னையில் உள்ள வாசு ஸ்டூடியோசில் ஈஸ்ட்மேன் கலர்லேப்பால் படமாக்கப்பட்டது. மீனாட்சி அம்மன் கோயில், கைலாயம் போன்று தத்ரூபமாக செட் அமைக்கப்பட்டிருந்தது. செட் என கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மீனாட்சி அம்மன் கோயில் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருக்கும்.

    இவ்வளவு விஷயம் இருக்கா

    இவ்வளவு விஷயம் இருக்கா

    கே.பி.மகாதேவன் இசையில் மொத்தம் 11 பாடல்கள் திருவிளையாடல் படத்தில் இடம்பெற்றிருக்கும். இதில் ஒரு நாள் போதுமா பாடலின் ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு ராகத்தில் அமைக்கப்பட்டது. பழம் நீயப்பா பாடலில் துவக்கத்தில் வரும் வசனத்தை சங்கரதாஸ் சுவாமிகளும், பாடல் வரிகளை கண்ணதாசனும் எழுதி இருந்தனர். இந்த பாடலில் 3 ராகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

    ரீ ரிலீசிலும் வெற்றி

    ரீ ரிலீசிலும் வெற்றி

    1965 ம் ஆண்டு ஜுலை 31 ம் தேதி ரிலீசான இந்த படத்தை சிவாஜி ஃபிலிம்ஸ் வெளியிட்டது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக ராஜா தியேட்டரில் கைலாய மலையின் மாதிரி வடிவத்தை அமைத்திருந்தார். தமிழக முழுவதும் பல தியேட்டர்களில் 25 வாரங்கள் ஓடிய படம் இது.

    English summary
    Sivaji's starred Thiruvilayadal movie completes 56 years of theatrical release. This movie based on thiruvilayadal puranam and released on july 31st 1965. today this movie completes 56 th year.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X