Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
என்னது...ஏகே 61 படத்தில் இவர் தான் வில்லனா...அப்போ அஜித் கிடையாதா?
சென்னை : ஏகே 61 படத்தில் அஜித், ஹீரோ - வில்லன் என இரட்டை ரோல்களில் நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், பிரபலமான நடிகர் ஒருவர் தான் ஏகே 61 படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து தற்போது ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார் அஜித். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தின் ஷுட்டிங் ஐதராபாத்தில் துவங்கி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வருகிறது.
செருப்பால
அடிவாங்கியும்
புத்திவரல…
பயில்வான்
ரங்கநாதனை
எச்சரித்த
கே.ராஜன்
!

நெகடிவ் ரோலில் அஜித்
இந்த படத்தில் அஜித் நீண்ட இடைவேளைக்கு பிறகு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், ஹீரோ -வில்லன் என இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்பட்டது. வங்கி கொள்ளையை மையமாக் கொண்ட இந்த படத்தில் அஜித், வயதான காலேஜ் ப்ரொஃபசர் ரோலில் நடிப்பதாக கூறப்பட்டது. இந்த தகவல் உண்மை என்பதை உறுதி செய்யும் விதமாக போனி கபூரும் தனது ட்விட்டர் பக்கத்தில், பிளாக் அண்ட் ஒயிட்டில் இருக்கும் அஜித்தின் நெகடிவ் இமேஜ் ஒன்றை வெளியிட்டார்.

டிரெண்டான அஜித் போட்டோஸ்
நீண்ட வெள்ளை தாடியுடன் இருக்கும் அஜித்தின் பல ஸ்டில்கள் வெளியாகின. இதே போல் ஹீரோ கேரக்டருக்காக 25 கிலோ வரை அஜித் எடை குறைத்திருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், செம ஸ்மாட், ஃபிட்டாக இருக்கும் அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோக்களும் சமீபத்தில் வெளியாகி டிரெண்டிங் ஆனது. ஆனால் அஜித் வயதான கெட்அப்பில் இருக்கும் ஸ்டில்கள் தான் இதுவரை வெளியாகி உள்ளது. அஜித் இளமை தோற்றத்தில் வருவது போல் ஒரு ஸ்டில் கூட வரவில்லை.

என்னது அஜித் இரட்டை வேடம் இல்லையா
இதற்கிடையில் சமீபத்தில் ஏகே 61 படத்தில் அஜித், இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை. இரண்டு லுக்குகளில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அளித்தது. அஜித்தை நீண்ட நாட்களுக்கு பிறகு இரட்டை வேடத்தில் பார்க்கலாம் என காத்திருந்த ரசிகர்கள், ஏமாற்றமடைந்தனர். இருந்தாலும் படத்தின் கதை என்னவாக இருக்கும் என அனைவரின் மனதிலும் ஒரு ஆர்வம் காணப்படுகிறது.

என்னங்க குழப்புறீங்க
ஐதராபாத்தில் சுமார் 9 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் ஷுட்டிங் நடத்தப்பட்டு வரும் நிலையில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிப்பதாக கூறப்படுகிறது. அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவில்லை என்றாலும் ஹீரோ, வில்லன் இரண்டுமே அவர் தான் என்று சொல்லும் மேலும் குழப்பினார்கள்.

அப்போ இவர் தான் வில்லனா
ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி, ஏகே 61 படத்தில் கேஜிஎஃப் நடிகர் ஜான் கொக்கின் இணைந்துள்ளதாக கூறப்பட்டது. இவர் தான் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறாராம். இவர் ஏற்கனவே பா.ரஞ்சித் இயக்கிய சார்பேட்டா பரம்பரை படத்தில் வேம்புலி ரோலில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர். இதனால் ரசிகர்கள், அப்படியானால் அஜித், வில்லன் கிடையாதா. ட்யூயல் ரோலும் கிடையாது, வில்லன் ரோலும் கிடையாது என இப்படி ஏமாற்றி விட்டீர்களே என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.