அடுத்த வைல்ட்கார்டு என்ட்ரி....பிக்பாஸ் வீட்டிற்குள் இன்று என்ட்ரி கொடுக்கும் பிரபலம்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் அக்டோபர் 3 ம் தேதி துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தற்போது 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதுவரை 6 பெண் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே வெளியேற்றப்பட்ட அபிஷேக் ராஜா, முதல் வைல்ட்கார்டு என்ட்ரியாக நிகழ்ச்சியின் 47 வது நாளில் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இதனால் போட்டியாளர்களின் எண்ணிக்கை 12 பேர் போட்டியாளர்களாக இருந்தனர்.

கேப்டனான அபினய்
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது எட்டாவது வாரத்தை அடைந்துள்ளது. இதன் முதல் நாளில் கேப்டன்சி டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் கடைசி வரை போராடி அபினய் வெற்றி பெற்றார். இதையடுத்த இந்த வார கேப்டனாக அபினய் தேர்வு செய்யப்பட்டார். கேப்டன் என்ற காரணத்தால் அபினய் இந்த வார நாமினேஷனில் இடம் பெறவில்லை. தொடர்ந்து ஏழு வாரங்களாக நாமினேஷனில் இருந்த அபினய், இந்த வாரம் முதல் முறையாக நாமினேஷனில் இடம்பெறவில்லை.

50 வது நாளில் அமீர் என்ட்ரி
இந்நிலையில் நிகழ்ச்சியின் 50 வது நாளில் இரண்டாவது வைல்ட்கார்டு என்ட்ரியாக டான்ஸ் மாஸ்டர் அமீர் பிக்பாஸ் வீட்டிற்கு, இரவு நேரத்தில் அனுப்பப்பட்டார். இதனால் போட்டியாளர்கள் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. அமீரின் வருகையை தொடர்ந்து இந்த வாரத்திற்கான லக்சுரி பட்ஜெட் டாஸ்க் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரியங்கா – சிபி மோதல்
இந்த டாஸ்கின் முதல் நாளில் வார்டனாக இருக்கும் சிபியின் பேச்சை கேட்காததால் பிரியங்காவிற்கு தண்டனை வழங்கப்பட்டது. பிரியங்கா அதை ஈகோ பிரச்சனையாக எடுத்துக் கொண்டதால் சிபி - பிரியங்கா இடையே மோதல் ஏற்பட்டது. மோதல், சிரிப்பு என கலந்து இந்த டாஸ்க் சென்று கொண்டிருக்கிறது.

சிபி – அக்ஷரா மோதல்
டாஸ்கின் இரண்டாவது நாளான இன்றைக்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் 52 வது நாளான இன்று சிபி மற்றும் அக்ஷரா இடையே மோதல் ஏற்படுகிறது. சிபியின் உத்தரவுகளை கேட்டு நடக்க அக்ஷரா மறுப்பு தெரிவிக்கிறார். தொடர்ந்து சிபி மீதான கோபத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களை போட்டு உடைக்கிறார். இந்த காட்சிகளே மூன்று ப்ரோமோக்களிலும் இடம்பெற்றுள்ளன.

இவர் தான் அடுத்த என்ட்ரி
இதற்கிடையில் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் அடுத்த வைல்ட்கார்டு என்ட்ரியாக மற்றொரு பிரபலம் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளாராம். அதுவும் இன்றே செல்ல உள்ளாராம். அது வேறுமில்லை நம்ம தளபதி விஜய்யின் நண்பரும், சின்னத்திரையின் டாப் நடிகர்களில் ஒருவருமான சஞ்சீவ் தான் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளார். இதனால் போட்டியாளர்களின் எண்ணிக்கை 14 ஆக உள்ளது.

இனி சூடுபிடிக்குமா
வழக்கமாக வைல்ட் கார்டு என்ட்ரியாக ஒருவர் அல்லது இருவர் தான் அனுப்பப்படுவார். ஆனால் இந்த முறை மூன்று பேர் வைல்ட்கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளனர். அதுவும் 50 நாட்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், புதிய நபர்கள் இருவர் வீட்டிற்குள் செல்வதாலும், தற்போது ஆண் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாலும் கேம் இன்னமும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











