இந்த வார டேஞ்சர் ஜோனில் இருக்கும் 4 பேர்... வெளியேற போவது இவர் தான்

சென்னை : அதிகமான ரசிகர்களைக் கொண்ட நிகழ்ச்சியாக இருக்கும் பிக்பாஸ் ஷோவின் ஐந்தாவது சீசன் அக்டோபர் 3 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை கடந்துள்ளது.

இதுவரை நமிதா மாரிமுத்து, நாடியா சாங், சின்னபொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 21 வது நாளில் எவிக்ஷன் மூலம் வெளியேற்றப்பட்ட அபிஷேக் ராஜா, 47 வது நாளில் வைல்ட்கார்டு என்ட்ரியாக மீண்டும் வந்துள்ளார்.

வைல்ட் கார்ட் என்ட்ரி

வைல்ட் கார்ட் என்ட்ரி

50 நாளில் அடுத்த வைல்ட்கார்டு என்ட்ரியாக டான்ஸ் மாஸ்டர் அமீரும், 53 வது நாளில் சின்னத்திரை நடிகர் சஞ்சீவும் வீட்டிற்குள் வந்துள்ளனர். வைல்ட்கார்டு என்ட்ரி என்பதால் அபிஷேக் இந்த வார நாமினேஷில் இல்லை. நாமினேஷன் முடிந்த பிறகே அமீர் மற்றும் சஞ்சீவ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

கமலுக்கு பதில் ரம்யா கிருஷ்ணனா

கமலுக்கு பதில் ரம்யா கிருஷ்ணனா

இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதனால் அவருக்கு பதில் ரம்யா கிருஷ்ணா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கமல் குணமாகி வரும் வரை ரம்யா கிருஷ்ணனே அடுத்த சில வாரங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இவங்க பேரும் அடிபடுது

இவங்க பேரும் அடிபடுது

அதே சமயம் மற்றொரு தகவலாக ஸ்ருதிஹாசன் அல்லது விஜய் சேதுபதி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கமல் திரும்பி வரும் வரை தொகுத்து வழங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. கமலின் மகள் மற்றும் நடிகை என்பதால் ஸ்ருதியையும், ஏற்கனவே மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதால் விஜய் சேதுபதியையும் தேர்வு செய்திருக்கிறார்கள் என கூறப்படுகிறது.

நாமினேட் ஆன 6 பேர்

நாமினேட் ஆன 6 பேர்

இந்நிலையில் இந்த வாரம் எவிக்ஷன் ப்ராசசிற்காக பாவ்னி, இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, தாமரை, நிரூப், பிரியங்கா ஆகிய 6 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். நாமினேஷன் ப்ராசசின் போது பிரியங்கா மற்றும் தாமரையை அதிகமானவர்கள் நாமினேட் செய்திருந்தனர்.

டேஞ்சர் ஜோனில் உள்ள 4 பேர்

டேஞ்சர் ஜோனில் உள்ள 4 பேர்


நாமினேட் செய்யப்பட்ட 6 பேரில் ஐக்கி பெர்ரி, நிரூப், பாவ்னி மற்றும் தாமரை ஆகிய நான்கு பேர் தான் இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் இருக்கிறார்கள். இவர்களில் ஐக்கி மற்றும் தாமரைக்கே இந்த வாரம் மிக குறைவான ஓட்டுக்கள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெளியேற போவது இவரா

வெளியேற போவது இவரா

இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட 6 பேரில் பிரியங்காவிற்கு தான் அதிக ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. லேட்டஸ்ட் தகவலின்படி இந்த வாரம் ஐக்கி பெர்ரி தான் குறைவான ஓட்டுக்களை பெற்று வெளியேற போகிறாராம். அதே சமயம் தாமரை வெளியேறவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X