வாவ்...செம அப்டேட்...தளபதி 66 ல் விஜய்க்கு ஜோடி இவரா ?
சென்னை : விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட படமாக தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார்.
இதைத் தொடர்ந்து தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் நடிக்க போகிறார் விஜய். இதன் மூலம் தெலுங்கு திரையுலகிலும் விஜய் தடம் பதிக்க போகிறார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க போகிறார். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

இரு மொழிகளில் தளபதி 66
தோழா படத்தை போலவே தளபதி 66 படத்தையும் வம்சி பைடிபள்ளி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இயக்க போகிறாராம். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா, கியாரா அத்வானி ஆகியோரிடம் பேசப்பட்டு வருவதாக ஏற்கனவே கூறப்பட்டது. ராஷ்மிகாவிடம் தயாரிப்பாளர் தில் ராஜு பேசி உள்ளதாகவும் கூறப்பட்டது.

இவர் தான் ஹீரோயினா
இந்நிலையில் படக்குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்த போது, தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷை புக் செய்துள்ளார்களாம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாம். கீர்த்தி சுரேஷ் இதற்கு முன் 2018 ல் விஜய் நடித்து வெளிவந்த சர்க்கார் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

ஆயுத பூஜையில் பட பூஜை
ஆயுத பூஜை நாளில் சிறப்பு பூஜையுடன் தளபதி 66 படத்தின் வேலைகள் துவங்கப்பட உள்ளதாம். படத்தின் துவக்க விழாவில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் விஜய்யின் மகளாக மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

12 ஆண்டுகளுக்கு பிறகு பிரகாஷ் ராஜ்
தளபதி 66 படத்தில் முக்கிய ரோலில் பிரகாஷ் ராஜும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் வில்லனாக இல்லாமல் பாசிடிவ் ரோலில் தான் பிரகாஷ் ராஜ் நடிக்கிறாராம். கில்ல படத்திற்கு பிறகு கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு, தளபதி 66 படத்தின் மூலம் விஜய் படத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











