அடி சக்கை... ராட்சசன் இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாகும் பிரபல தமிழ் நடிகை!

மும்பை : முண்டாசுப்பட்டி படத்தின் மூலம் முதன்முறையாக இணைந்த விஷ்ணு விஷால், ராம்குமார் கூட்டணி மீண்டும் இணைந்த ராட்சசன் திரைப்படம் தமிழ் சினிமாவில் வெளியான ஆகச்சிறந்த த்ரில்லர் படங்களில் ஒன்றாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

விஷ்ணு விஷாலின் சினிமா கேரியரில் மிக முக்கிய படமாக அமைந்த ராட்சசன் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை அமலாபால் நடித்து இருப்பார்.

இப்பொழுது ராட்சசன் திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட அதில் நடிகர் அக்ஷய்குமார் ஹீரோவாக நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கதாநாயகியாக பிரபல தமிழ் நடிகை ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முண்டாசுப்பட்டி

முண்டாசுப்பட்டி

குறும்படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும் வாய்ப்பை பெற்ற இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் வெளியான முண்டாசுபட்டி திரைப்படம் வித்தியாசமான காமெடி ஜானரில் வெளியாகி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தமிழகத்தில் 1970 மற்றும் 80 பல கட்டங்களில் நடக்கக் கூடிய படமாக முண்டாசுப்பட்டி திரைப்படம் வெளியாகி இருந்தது. டெக்னாலஜி அசுர வேகத்தில் உயர்ந்தும் இன்றளவும் பல்வேறு மூட நம்பிக்கைகள் நிலவி வர டெக்னாலஜி இல்லாத காலத்தில் ஒரு கிராமமே புகைப்படம் எடுத்தால் இறந்து விடுவோம் என்ற அச்சத்தில் இருக்கிறது என்கிற சுவாரசியமான மையக்கருவை கொண்டு வெளியான முண்டாசுபட்டி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

ராட்சசன்

ராட்சசன்

இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் விஷ்ணு விஷால் மற்றும் ராம்குமார் கூட்டணியில் 2018ஆம் ஆண்டு வெளியான ராட்சசன் திரைப்படம் முற்றிலும் மாறுபட்ட த்ரில்லர் படமாக வெளியானது. முதல் படம் முண்டாசுப்பட்டியை முழுக்க முழுக்க காமெடி படமாக இயக்கிய ராம்குமார் ராட்சசன் படத்தில் அப்படியே ராட்சசனாக மாறியிருந்தார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான ராட்சசன் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. தொடர்ந்து கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த விஷ்ணு விஷாலுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக மட்டுமல்லாமல் விஷ்ணு விஷாலின் சினிமா கேரியரில் இந்த படம் முக்கிய படமாகவும் அமைந்தது. விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை அமலாபால் நடித்திருந்தார்.

இந்தியிலும் ரீமேக்

இந்தியிலும் ரீமேக்

எங்கு திரும்பினாலும் பாசிட்டிவான விமர்சனங்களுடன் வலம் வந்த ராட்சசன் திரைப்படம் தெலுங்கில் ராக்ஷசுடு என்ற பெயரில் ரீமேக் இடப்பட்டது. இதில் தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா சீனிவாஸ் ஹீரோவாக நடித்திருக்க நடிகை அனுபமா பரமேஸ்வரன் அமலா பால் கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தமிழில் வெற்றி பெற்றது போலவே ராட்சசன் தெலுங்கு ரீமேக் ராட்சசடுவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளது. இந்த நிலையில் ராட்சசன் இந்தியிலும் ரீமேக் ஆக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்ஷய் குமார் ஹீரோவாக

அக்ஷய் குமார் ஹீரோவாக

நடிகர் ராகவா லாரன்ஸின் அதிரடியான இயக்கத்தில் வெளியான காஞ்சனா 3 இந்தியில் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. தமிழில் வெற்றி பெற்ற அளவிற்கு பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வந்த லக்ஷ்மி பாம் படத்தில் நடிகர் அக்ஷய் குமார் நடித்திருக்க இந்தி ரசிகர்களுக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. இத்திரைப்படம் சென்ற ஆண்டு வெளியாகி ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது . இந்த நிலையில் அக்ஷய்குமார் மீண்டும் ஒரு தமிழ் ரீமேக் படத்தில் நடிக்க இருப்பதாக அப்போதே சில தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டது. அதன்படி தமிழில் பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற ராட்சசன் இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 சைக்கோ கொலைகாரன்

சைக்கோ கொலைகாரன்

இந்தியாவின் மிகச்சிறந்த சைக்கோ த்ரில்லர் படங்களில் ராட்சசனுக்கு முதலிடம் கொடுக்கலாம் அந்த அளவிற்கு படம் ஆரம்பித்தது முதல் ஒவ்வொரு காட்சியும் பார்க்கும் அனைவரையும் சீட்டின் நுனியில் உட்கார வைக்கும். இதில் சைக்கோ கொலைகாரனாக நடிகர் சரவணன் நடித்து மிரட்டி இருக்க இவரே தெலுங்கிலும் நடித்திருந்தார். இப்பொழுது ராட்சசன் இந்தியில் ரீமேக் ஆவது உறுதியாகி இருக்க இந்தி ரீமேக்கிலும் சைக்கோ கொலைகாரன் கதாபாத்திரத்தில் சரவணன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த முக்கிய அப்டேட் தற்போது கிடைத்துள்ளது.

கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங்

கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங்

தமிழ் மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற உடனேயே அக்ஷய் குமார் ராட்சசன் பாடத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கி இருப்பதாகவும் மேலும் தன்னுடைய சொந்த பேனர் தயாரிப்பின் கீழ் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.ரமேஷ் வர்மா என்ற இயக்குனர் ராட்சசன் இந்தி ரீமேக்கை இயக்க உள்ளார். இந்த நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ரகுல் பிரீத் சிங் நடிக்க இருப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது.
ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட சூப்பர் ஹிட் தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை ரகுல் பிரீத் சிங் இப்பொழுது இந்தியன் 2, அயலான் மற்றும் பெண்களை மையப்படுத்தி உருவாகும் அக்டோபர் 31ஸ்ட் லேடீஸ் நைட் ஆகிய படங்களில் நடத்து வருகிறார். தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் பல படங்களில் நடித்து பிரபலமாக உள்ள ரகுல் பிரீத் சிங் இப்பொழுது ராட்சசன் இந்தி ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X