வேற லெவல் அப்டேட்டா இருக்கே... ஏகே 61 ஹீரோயின் இவர் தானா... அப்போ அவர்?
சென்னை : ஏகே 61 படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க போவது யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏகே 61 படம் பற்றி முதலில் சொல்லப்பட்ட தகவல்கள் மாறி வருவதால் ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.
ஹெச்.வினோத், போனி கபூர், அஜித் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ஏகே 61 படம் பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வந்து ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. வலிமை படத்தின் மூலம் கற்ற பாடங்களை அடித்தளமாக வைத்து இந்த படத்தை எடுக்க போகிறார்கள் என்பது மட்டும் உறுதியாகி உள்ளது.

ஏகே 61 டைட்டில் எப்போ
ஏகே 61 படத்தின் ஷுட்டிங் பூஜையுடன் ஐதராபாத்தில் நேற்று துவங்கப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தயாரிப்பாளர் போனி கபூரும் படத்தின் கிளாப் போர்டை வினோத் மற்றும் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷாவிடம் கொடுப்பது போன்ற போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அது மட்டுமல்ல ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை அஜித்தின் பிறந்த நாளான மே 1 ம் தேதியன்று போனி கபூர் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வேற லெவல் கதையாமே
ஏகே 61 படம் வங்கி கொள்ளையை மையமாகக் கொண்ட படமாக இருந்தாலும் ஆக்ஷன் அட்வென்சர் படமாக இருக்க போகிறதாம். இது தமிழ் ஆடியன்ஸ்களுக்கு மட்டுமில்லை பான் இந்தியன் ஆடியன்ஸ்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தருவதாக இருக்குமாம். இதில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதால் முதலில் ஹீரோ அஜித் தான் காலேஜ் ப்ரோஃபசர் ரோலில் நடிப்பதாக சொன்னார்கள். ஆனால் வயதான ரோலில் நடிக்கும் அஜித் தான் காலேஜ் ப்ரொஃபசராக நடிக்கிறாராம்.

அவர் இல்ல...இவர் தான் ஹீரோயின்
அஜித் பற்றிய தகவல்கள் ஆர்வத்தை தூண்டி வருவதால் அவருக்கு ஜோடியாக யார் நடிக்க போகிறார் என்ற ஆர்வமும் அதிகரித்துள்ளது. முதலில் அதிதி ராய் ஹீரோயினாக நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், லேட்டஸ்ட் தகவலாக ரகுல் ப்ரீத் சிங் தான் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கிறாராம். ரகுல் ப்ரீத் சிங் ஏற்கனவே தமிழில் என்ஜிகே படத்தில் நடித்துள்ளார்.

அடுத்த லெவலுக்கு போயிட்டார்
தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான், கமலுடன் இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது அஜித்துடன் ஜோடி சேர உள்ளதால் ரகுல் ப்ரீத் சிங் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி உள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். விரைவில் ஏகே 61 ஹீரோயின் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











