வில் ஸ்மித் உடன் ஏ.ஆர். ரஹ்மான்.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்.. என்ன காரணம் தெரியுமா?

சென்னை: அந்த ஆஸ்கர் அறைக்கு பிறகு இந்தியாவிற்கு சமீபத்தில் விசிட் அடித்திருந்தார் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்.

இந்நிலையில், வில் ஸ்மித் உடன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

ஆனால், இது சமீபத்திய சந்திப்பு இல்லை என்பது பற்றியும் ஏன் தற்போது இந்த புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன என்பது குறித்தும் இங்கே பார்ப்போம்.

கிறிஸ் ரக்கை அறைந்த வில் ஸ்மித்

கிறிஸ் ரக்கை அறைந்த வில் ஸ்மித்

ஆஸ்கர் விருது விழாவையும் அந்த விருது விழாவில் விருது வாங்கியவர்களையும் ஒட்டுமொத்தமாக வில் ஸ்மித் கிறிஸ் ராக்கை அறைந்த அந்த ஒற்றை நிகழ்வு மறக்கடிக்க செய்தது. தனது மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தின் மொட்டை தலை குறித்து கிண்டல் செய்த நிலையில், ஆத்திரம் அடைந்த வில் ஸ்மித் மேடையேறி காமெடி நடிகர் கிறிஸ் ராக்கை அறைந்தார்.

இந்தியாவுக்கு விசிட்

இந்தியாவுக்கு விசிட்

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது வில் ஸ்மித் விஷயத்திலும் சரியாக போனது. ஆஸ்கர் குழு 10 ஆண்டுகளுக்கு வில் ஸ்மித்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது. தனது தவறை உணர்ந்த வில் ஸ்மித் ஆஸ்கர் உறுப்பினர் பதவியை அவரே முன் வந்து ராஜினாமா செய்திருந்தார். அதன் பின்னர் எங்கேயும் தென்படாத வில் ஸ்மித் மும்பை தனியார் விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய புகைப்படங்கள் உலகளவில் டிரெண்டாகின.

அமைதியை தேடி

அமைதியை தேடி

இந்தியாவிற்கு அமைதியை தேடி ஆன்மிக பயணத்திற்காக நடிகர் வில் ஸ்மித் வந்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும், சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் அதே விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் வில் ஸ்மித் என்றும் கூறப்படுகிறது. நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் வில் ஸ்மித் நடிக்கவிருந்த சில படங்களும் அந்த பிரச்சனை காரணமாக அவர் கையை விட்டுப் போனதாக கூறப்படுகிறது.

வில் ஸ்மித் உடன் ஏ.ஆர். ரஹ்மான்

வில் ஸ்மித் உடன் ஏ.ஆர். ரஹ்மான்

இந்நிலையில், சமூக வலைதளங்களில் தற்போது வில் ஸ்மித் உடன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இருக்கும் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. மேலும், சமீபத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டதாகவும் கூறப்படுகின்றன. ஆனால், உண்மையில், இந்த புகைப்படங்கள் கடந்த 2018ல் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அன்பான உள்ளம் கொண்டவர்

அன்பான உள்ளம் கொண்டவர்

டைகர் ஷெராஃப் நடிப்பில் உருவாகி உள்ள ஹீரோபன்டி 2 படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். அந்த படத்தை புரமோட் செய்யும் விதமாக சமீபத்தில் கபில் ஷர்மா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, இந்த புகைப்படங்களை காட்டி, ஏ.ஆர். ரஹ்மானிடம் கேள்வி எழுப்பும் போது, வில் ஸ்மித் ரொம்பவே அன்பான உள்ளம் கொண்டவர் என ரஹ்மான் கூறியுள்ளார்.

Recommended Video

வெறி அதிகமாச்சு | AR Rahman and Parthiban Conversation | Iravin Nizhal
ஆஸ்கர் அறை பற்றி

ஆஸ்கர் அறை பற்றி

ஆஸ்கர் மேடையில் கிறிஸ் ராக்கை அறைந்தது பற்றி நேரடியாக பதில் அளிக்காமல், சில சமயங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும் என மைல்டாக கூறிவிட்டு புன்னகை புரிந்தார் ஏ.ஆர். ரஹ்மான். இந்நிலையில், அந்த புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X