»   »  ப்ளூவேல் சேலஞ்சை விடுங்க, ஜிமிக்கி கம்மல் சேலஞ்ச் தெரியுமா?: அதுவும் அந்த வைரல் வீடியோ...

ப்ளூவேல் சேலஞ்சை விடுங்க, ஜிமிக்கி கம்மல் சேலஞ்ச் தெரியுமா?: அதுவும் அந்த வைரல் வீடியோ...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னடம்மேட ஜிமிக்கி கம்மல் சவால் மிகவும் பிரபலமாகியுள்ளது. அதிலும் குறிப்பாக சில பெண்கள் ஆடிய வீடியோ வைரலாகியுள்ளது.

லால் ஜோஸ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸான படம் வெளிப்படிந்தே புஸ்தகம். அந்த படத்தில் என்னடம்மேட ஜிமிக்கி கம்மல் என்ற பாடல் உள்ளது.

ஓணம் நேரத்தையொட்டி படக்குழு ஒரு சவால் விட்டது.

ஜிமிக்கி கம்மல் சேலஞ்ச்

ஜிமிக்கி கம்மல் சேலஞ்ச்

ஜிமிக்கி கம்மல் சேலஞ்சை ஏற்று அந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ எடுத்து அதை யூடியூப்பில் அப்லோடு செய்ய வேண்டும். படத்தை விளம்பரப்படுத்த இந்த சேலஞ்சை கிளப்பிவிட்டார்கள்.

டான்ஸ்

கேரளாவில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் ஆசிரியைகளும், மாணவிகளும் சேர்ந்து ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளனர். அந்த வீடியோ யூடியூப்பில் வெளியானது.

வைரல்

வைரல்

அந்த கேரளத்து பெண்குட்டிகள் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ் பசங்க மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பசங்க

பசங்க

ஜிமிக்கி கம்மல் வீடியோவை பல பசங்க திரும்பத் திரும்ப பார்த்து வருகிறார்கள். அதிலும் முன் வரிசையில் நிற்கும் ஒரு பெண் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

ஜிமிக்கி கம்மல் டான்ஸ் வீடியோ பிடித்துப் போய் ஃபேஸ்புக்கில் ஜிமிக்கி கம்மல் என்ற பக்கமே துவங்கிவிட்டனர். அந்த பக்கத்தை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

English summary
A group of women dancing for Jimikki Kammal song has gone viral. Even the team that performed the song hasn't expected this to go this much viral.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X