சூரரைப் போற்று ஊர்வசிக்கும் தேசிய விருது கிடைச்சிருக்கணும்...இப்படி சொல்லி இருக்குறது யாரு தெரியுமா?

சென்னை : 68-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் மத்திய அரசு சார்பில் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மூலம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழிலும் பல படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

This popular actress said that Oorvasi had won too National award for Soorarai Pottru

அவற்றில் சுதா கொங்காரா இயக்கத்தில், சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி நடித்திருந்த 'சூரரைப் போற்று' படம் சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த படம், சிறந்த திரைக்கதை (சுதா கொங்கரா), சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி), சிறந்த பின்னணி இசை (ஜி.வி.பிரகாஷ் குமார்) என 5 பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றுள்ளது.

இதற்காக சூர்யா மற்றும் சூரரைப் போற்று படக்குழுவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ரஜினி, கமல் உள்ளிட்டோரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தனர். கமல் தனது ட்வீட்டில், தமிழ் சினிமா தேசத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது என குறிப்பிட்டிருந்தார்.

இந்த படத்தில் சூர்யாவுக்கு அம்மாவாக நடித்தவர் நடிகை ஊர்வசி. 80களில் இருந்தே தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்து வந்தவர் நடிகை ஊர்வசி. அதன் பின்னர் முக்கிய குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஹீரோக்களுக்கு அம்மா ரோல்களில் அதிகம் நடித்து வருகிறார். சமீபத்தில் ரிலீசான ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ் மற்றும் பலர் நடித்த, 'வீட்ல விசேஷம்' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தின் கதையே நடிகை ஊர்வசி மீதுதான் பயணிக்கும். நகைச்சுவை, வெகுளி, கோபம், அழுகை என எல்லா விதமான கேரக்டர்களில் நடித்து அசத்தக்கூடியவர் ஊர்வசி. தமக்கே உரிய உடல்மொழி மற்றும் டயலாக் டெலிவரியால் திரையில் ஒரு நம்பமுடியாத மேஜிக்கை அசாத்தியமாக நிகழ்த்தக் கூடியவர்.

இந்நிலையில் நடிகை குஷ்பூ தமது ட்விட்டரில் தேசிய விருது பெற்ற ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதற்கிடையில், தம்முடைய ஒரு பதிவில், "ஊர்வசி விருது வென்றிருக்க வேண்டும் என நினைக்கிறேன். அவர் (நடிப்பு) outstanding-ஆக இருந்தது" என்று குறிப்பிட்டுள்ளார். பலரும் இந்த ட்வீட்டை பகிர்ந்து வழிமொழிந்துள்ளனர்.

குஷ்பு போட்ட இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. சூரரைப் போற்று படத்தில் ஊர்வசி நடித்த ஸ்டில்களை பகிர்ந்து, குஷ்புவின் ட்வீட்டை ரீட்வீட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X