பிரியங்காவை காப்பாற்ற வந்த சீஃப் கெஸ்ட்...யாருன்னு தெரியுமா ?

சென்னை : பிக்பாஸ் முந்தைய சீசன்களில் அடிக்கடி சீஃப் கெஸ்ட் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவார்கள். புதிய படங்களின் போஸ்டர்கள் அவ்வப்போது வெளியிடப்படும்.
ஆனால் கொரோனா காரணமாக இந்த முறை சிறப்பு விருந்தினர்கள் யாரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வரவில்லை. ஓ மணப்பெண்ணே படத்தின் ரிலீசின் போது ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானிசங்கர் மட்டும் ஜும் காலில் வந்து, போட்டியாளர்களுடன் பேசினார்கள்.

பிக்பாஸ் சீசன் 5 ல் இந்த வாரம் அனைவரையும் பிக்பாஸ் நாமினேட் செய்திருந்தார். இதில் அடுத்தடுத்த டாஸ்குகளில் வெற்றி பெற்று தாமரை, சஞ்சீவ், அமீர், நிரூப் உள்ளிட்டோர் காப்பாற்றப்பட்டனர். நேற்றைய எபிசோடில், நாமினேட் செய்யப்பட்ட 6 பேரில் ராஜுவை மட்டும் காப்பாற்றுவதாக கமல் அறிவித்தார்.

கலாய்த்த கமல்

கலாய்த்த கமல்

இன்றைய முதல் ப்ரோமோவில் பீசாவிற்காக பஸ் டாஸ்கில் கீழே இறங்கி விட்டீர்களே என பிரியங்காவை கலாய்த்தார் கமல். அவரும், என்னை கீழே இறங்க வைப்பதற்காக தான் பிக்பாஸ் வெஜ் பீசா அனுப்பி வைத்துள்ளார் என நினைத்தேன் சார் என்றார்.

சிறப்பு விருந்தினர்

சிறப்பு விருந்தினர்

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடிற்கான இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் கமலுடன் மேடையில் சில சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர். அவர்களில் ஹிப்ஹாப் தமிழா ஆதியும் ஒருவர். அவரிடம் இந்த ஐந்து பேரில் ஒருவரை காப்பாற்ற வேண்டும் என்கிறார் கமல்.

காப்பாற்றப்பட்ட பிரியங்கா

காப்பாற்றப்பட்ட பிரியங்கா

அதற்கு க்ளூ கொடுக்கும் ஆதி, இப்போது காப்பாற்றப்பட போகிறவரை நான் ஏற்கனவே சந்தித்துள்ளேன்.இங்குள்ள பெரும்பாலானவர்களை நான் சந்தித்தது இல்லை. ஒரு சிலரை மட்டும் நான் சந்தித்துள்ளேன். அவர்களில் ஒருவர் பிரியங்கா. பிரியங்காவை நான் காப்பாற்றுகிறேன் என்கிறார்.

யாருப்பா டைட்டில் வின்னர்

யாருப்பா டைட்டில் வின்னர்

இந்த ப்ரோமோவிற்கும் ஏராளமானோர் பிரியங்காவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே சமயம் சிலர், 75 நாட்கள் கடந்து விட்டது இன்னமும் டைட்டில் வின்னர் யார் என்பதை கணிக்க முடியவில்லை. இனி வரும் நாட்களில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். எல்லா வார இறுதியிலும் பிரியங்காவை கமல் வறுத்தெடுக்கிறார் என ரெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X