For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இந்த வாரம் போரிங் போட்டியாளர்கள் யார் தெரியுமா? கடைசி நேரத்தில் உஷாராக யோசித்து எஸ்கேப் ஆன பாலா!

  |

  சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி வார வாரம் ஒரே பேட்டர்னில் நடப்பதே ரசிகர்களுக்கு போரிங்கை தான் தருகிறது.

  இதில், வார வாரம் போட்டியாளர்களில் இருவரை போரிங் போட்டியாளர் என தேர்வு செய்து கண்ணாடி சிறையில் அடைத்து வருவதும், சிறை என்ற பெயர் இந்த சீசனில் ஓய்வெடுக்கும் அறையாக மாறிய நிலையில், ஜாலியாக தூங்கி விட்டு வருகின்றனர்.

  இதில், சிலர் முறைத்துக் கொள்வதும் பழி வாங்குகிறேன் என்கிற பெயரில் வேடிக்கை செய்வதும் செம காமெடி.

  பிராக்டீஸ் வாட் யூ பிரீட்ச்.. பாலாவை கிழி கிழியென கிழித்த அனிதா.. வேற லெவல் நாமினேஷன்!

  பால் கேட்ச்

  பால் கேட்ச்

  பிக் பாஸ் டீமுக்கு வேற ஐடியா கிடைக்காமல் இப்படி பால் கேட்ச் என்கிற டாஸ்க்கை கொடுத்து, அவன் பந்தை இவன் புடிச்சான், இவன் பந்தை அவன் புடிச்சான் என பெண் போட்டியாளர்கள் இருப்பதை மறந்து விட்டு இப்படி பண்ணுவது நியாயமா? சில நேரத்தில் ரசிகர்களுக்கு அவர்கள் பேசுவதை கேட்கவே ஒரு மாதிரியாக உள்ளதாக சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

  கோல்டன் பால்

  கோல்டன் பால்

  கலர் கலரா பந்து போட்டு ஆப்பு வைத்து வந்த பிக்பாஸ் குழு கடைசியில் தங்க நிற டிராகன் பந்தை போட்டு அதிலும் ஒரு செம ட்விஸ்ட் வைத்திருந்தார்கள். பந்தை பிடித்தவர்கள், அடுத்தவர்களின் மதிப்பெண்களை இஷ்டத்துக்கு மாற்றி விளையாடும் சக்தி அவர்களுக்கு கொடுக்கப்பட்டு இருந்தது. ரியோ கடைசியில் அதிக புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். அவரை டைரக்ட்டா தலைவர் போட்டிக்கு பிக் பாஸ் நாமினேட்டும் செய்து விட்டார்.

  போரிங் போட்டியாளர்

  போரிங் போட்டியாளர்

  இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் போரிங்காக யார் செயல்பட்டது என்பதை தேர்வு செய்யும் நேரத்தில் மிகப்பெரிய பல சர்ச்சைகளும் சண்டைகளும் வெடித்தன. அனிதாவும் பாலாவும் தங்களை மாற்றி மாற்றி குறை சொல்லிக் கொண்டனர். ஷிவானி வழக்கம் போல பாலாவுக்கு சப்போர்ட் பண்ணி அனிதாவின் பெயரையே சொன்னார்.

  அர்ச்சனா அடித்த விபூதி

  அர்ச்சனா அடித்த விபூதி

  அன்பு கேங்கின் தலைவியான அர்ச்சனா வெளியேறியதற்கு ஆரி மட்டும் தான் காரணம் என நினைத்துக் கொண்டிருக்கும் ரியோ, போரிங் போட்டியாளருக்கும் ஆரியை நியமித்தது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்றாக இருந்தது. நிஷாவும், அர்ச்சனாவும் இந்நேரம் இருந்திருந்தால், மீண்டும் ஆரிக்கு ஓட்டுப் போட்டு அவரை ஜெயிலுக்கு அனுப்பி இருப்பார்கள்.

  வசமா சிக்கிய கேபி

  வசமா சிக்கிய கேபி

  இவங்க ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்தாலே நியாயம் கிடைக்காது, ஃபேவரிசம் தான் நடக்கும் என்பதை தெரிந்து கொண்ட கேபி, தனது டீமில் உள்ள ரியோ மற்றும் சோமும் கூட தனக்கு இந்த முறை உதவி செய்யவில்லை என நினைத்து ரொம்பவே அப்செட் ஆனார். தானே 9வது இடத்தை தேர்வு செய்த கொண்ட நிலையில், கேபியை முதல் ஆளாக ஹவுஸ்மேட்கள் ஓய்வெடுக்கும் அறைக்கு அனுப்பினர்.

  உஷாரான பாலா

  உஷாரான பாலா

  பாலா, ஷிவானி, ஆஜீத் ஆகிய மூவரில் ஒருவர் கேபியுடன் கண்ணாடி சிறைக்கு செல்ல வேண்டிய நிலையில், ஷிவானியை சேவ் செய்த ஹவுஸ்மேட்கள், பாலாவை உள்ளே தள்ள பிளான் போட்டு விட்டார்கள். ரியோ, அனிதாவை தொடர்ந்து இந்த வாரம் கேப்டனாக இருக்கும் பாலாவை சிறைக்கு தள்ள வேண்டிய நிலையில், உஷாரான பாலா, கேபி ஓட்டுப் போடக் கூடாது என வாக்குவாதம் செய்து ஆஜீத்தை பலி கடாவாக்கி விட்டார்.

  Bigg Boss Archana twitterல் வெளியேறினார் | Love -Hate வேண்டாம்
  யார் யார்

  யார் யார்

  கேபி மற்றும் ஆஜீத் தான் இந்த வாரம் வொர்ஸ்ட் பர்ஃபார்மர் என பாலா சொன்னதும் கடுப்பான கேபி, போரிங்னு சொல்லு என திட்ட, சுவாரஸ்யம் குறைவான போட்டியாளர்கள் என தமிழில் சொன்ன பாலா இருவரையும் ஓய்வெடுக்கும் அறையில் உட்கார வைத்து விட்டார். பாலா பண்ணது தப்பு என ஆரி மறுபடியும் மூஞ்சிக்கு நேராக உரக்க சொல்லியது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளி வருகிறது.

  English summary
  After Balaji Murugadoss trickily debate and escaped from nominating as a boring performer. This week Aajeedh and Gabriella went to Glass jail.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X