இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்கள்.. கோல்டு, கட்டா குஸ்தி, டிஎஸ்பி இடையே கடும் போட்டி!
சென்னை: வார வாரம் ஓடிடியிலும் தியேட்டரிலும் ஏகப்பட்ட புதிய படங்கள் வெளியாகி வருகின்றன.
பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு திணறும் படங்களும், சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரிய லாபம் அடையும் படங்களையும் பார்த்து வருகிறோம்.
இந்நிலையில், இந்த வாரம் வெளியாக உள்ள கோல்டு, கட்டா குஸ்தி, டிஎஸ்பி படங்களுக்கு இடையே பாக்ஸ் ஆபிஸில் செம கிளாஷ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாராவின் கோல்டு
பிரேமம் படத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கி உள்ள கோல்டு திரைப்படம் டிசம்பர் 1ம் தேதி தியேட்டரில் வெளியாகிறது. மலையாளம், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தில் பிரித்விராஜ் மற்றும் நயன்தாரா நடித்துள்ளனர். இந்த படத்துக்கு உண்மையாகவே இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் எந்தவொரு ப்ரமோஷனும் பெரிதாக செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி
இயக்குனர் செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வரும் டிசம்பர் 2ம் தேதி வெளியாக உள்ளது கட்டா குஸ்தி திரைப்படம். இந்த ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எஃப் ஐ ஆர் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில் கட்டா குஸ்தி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான அதன் ட்ரைலர்கள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லக்ஷ்மி உடன் குஸ்தி போட விஷ்ணு விஷால் ரெடியாகி விட்டார்.

விஜய்சேதுபதியின் டிஎஸ்பி
சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணியில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில் தற்போது பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள டிஎஸ்பி திரைப்படம் வரும் டிசம்பர் 2ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு கிருத்திவாஸ் நடித்துள்ளார். பிக் பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சேதுபதி படத்திற்குப் பிறகு மீண்டும் போலீஸ் கெட்டப்பில் விஜய் சேதுபதி மிரட்ட உள்ளார்.

எந்த படம் பார்க்கலாம்
இந்த வாரம் டிசம்பர் 1 மற்றும் 2ம் தேதிகளில் வெளியாகும் 3 படங்களும் மினிமம் கியாரண்டி படங்களாகவே தெரிகின்றன. நிச்சயம் தியேட்டருக்கு செல்லும் ரசிகர்களை இந்த படங்கள் ஏமாற்றி அனுப்பாது என எதிர்பார்க்கலாம். நயன்தாராவின் கோல்டு, விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி மற்றும் விஜய்சேதுபதியின் டிஎஸ்பி என மூன்று படங்களும் வெளியான பின்னர், இந்த வாரம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பெற்றது எந்த படம் என்பது தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications











