»   »  சுதந்திர தின ஸ்பெஷல்.... 'தொடரி' தனுஷ் Vs 'தர்மதுரை' விஜய் சேதுபதி!

சுதந்திர தின ஸ்பெஷல்.... 'தொடரி' தனுஷ் Vs 'தர்மதுரை' விஜய் சேதுபதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷின் 'தொடரி' விஜய் சேதுபதியின் 'தர்மதுரை' 2 படங்களும் ஆகஸ்ட் 12 ம் தேதி வெளியாகி நேரடியாக மோதிக் கொள்ளவுள்ளன.

தனுஷ்- கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கியிருக்கும் படம் 'தொடரி'. இமான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருக்கிறது.

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படத்தை ஜூலை இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் ரஜினியின் 'கபாலி' வெளியாவதால் 'தொடரி' படத்தை தள்ளி வைத்தனர்.

Thodari Clash with Dharmadurai

தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து தணிக்கைப் பணிகளை மேற்கொண்டு வருகின்ற ஆகஸ்ட் 12ம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

அதே நாளில் விஜய் சேதுபதி, தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'தர்மதுரை' படமும் வெளியாகவிருக்கிறது.

Thodari Clash with Dharmadurai

சீனு ராமசாமி இயக்கியிருக்கும் இப்படத்துக்கு யுவன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இறுதிகட்ட பணிகளை விரைவாக முடித்து படத்தை ஆகஸ்ட் 12ம் தேதி வெளியிடவுள்ளனர்.

இதனால் தனுஷ்-விஜய் சேதுபதி நேரடியாக மோதிக்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. தனுஷின் 'வட சென்னை' படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடமேற்று நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Dhanush's Thodari Vijay Sethupathi's Dharmadurai Direct Clash on August 12.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil