»   »  பிரமாண்டமாக வெளியானது தூங்காவனம் பாடல்கள்.. 2வது டிரெய்லரும் ரிலீஸ்

பிரமாண்டமாக வெளியானது தூங்காவனம் பாடல்கள்.. 2வது டிரெய்லரும் ரிலீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமலின் நடிப்பில் உருவாகியிருக்கும் தூங்காவனம் படத்தின் பாடல்கள் சற்று முன்பு சென்னை சத்யம் திரையரங்கத்தில் வெளியானது. மேலும் தூங்காவனம் படத்தின் 2 வது டிரெய்லரையும் வெளியிட்டு இருக்கின்றனர்.

ஏற்கனவே படத்தின் டிரெய்லர் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இன்று பாடல்களை வெளியிட்டு இருக்கின்றனர். ஜிப்ரானின் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.


பாடல்கள் வெளியீடைத் தொடர்ந்து ட்விட்டரில் தற்போது ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது தூங்காவனம் #thoongaavanam ஹெஷ்டேக்.


தூங்காவனம்

தூங்காவனம்

கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சம்பத், கிஷோர், ஆஷா சரத், மது ஷாலினி மற்றும் யூகி சேது ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தூங்காவனம். தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தை கமலின் உதவியாளர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கியிருக்கிறார்.


பாடல்கள் வெளியீடு

பாடல்கள் வெளியீடு

இன்று காலை சத்யம் திரையரங்கில் தூங்காவனம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த இசை வெளியீட்டு விழாவில், நடிகர் கமல், கவிஞர் வைரமுத்து, தனுஷ், விஷால், சம்பத், கிஷோர், கிரேசி மோகன், யூகி சேது, வையாபுரி நடிகைகள் திரிஷா, ஸ்ருதிஹாசன், மதுஷாலினி, நிவேதா தாமஸ், லிசி பிரியதர்ஷன், ஸ்ரீப்ரியா, இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, பாண்டிராஜ், கௌதம் வாசுதேவன், எம்.பாலாஜி, அமீர், தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


தொடக்க உரை

தொடக்க உரை

கவிஞர் வைரமுத்து விழாவின் தொடக்க உரையை வழங்கி விழாவைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து இசையமைப்பாளர் ஜிப்ரான், கமல் ஹாசன் மற்றும் இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா ஆகியோர் படத்தைப் பற்றி பேசினர். அதன் பின்னர் தூங்காவனம் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டது.


2 வது டிரெய்லர்

தூங்காவனம் படத்தின் முதல் டிரெய்லர் மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இன்று படத்தின் 2 வது டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டனர். படத்தின் முதல் டிரெய்லரை விடவும் 2 வது டிரெய்லர் மிகவும் விறுவிறுப்புடனும் அட்டகாசமாகவும் இருக்கிறது. இந்த டிரெய்லரில் கமலின் மகன் மற்றும் மது ஷாலினி ஆகியோரை அறிமுகப்படுத்தி உள்ளனர்.


முதன்முறையாக

முதன்முறையாக

இசை வெளியீட்டு விழாவை முதன்முறையாக யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பு செய்தனர். சினிமா உலகில் இதுவரை இல்லாத புதுமையான முயற்சியாக இது அனைவரின் பாராட்டையும் பெற்றது.


ஆக்க்ஷன் விருந்து

ஆக்க்ஷன் விருந்து

அதிரடி ஆக்க்ஷன் + சண்டைக் காட்சிகளுடன் வெளியான இந்த டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மேலும் தற்போது ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது தூங்காவனம்.


பிரகாஷ் ராஜின் வசனம்

டிரெய்லரில் பிரகாஷ் ராஜ் இனி உன் மூஞ்ச நான் பாக்கவே கூடாது என்று கமலிடம் கூறும் காட்சி ஒன்று உள்ளது. அதனை வைத்து ட்வீட்டுகளை உருவாக்கி வருகின்றனர் கமலின் ரசிகர்கள்.


அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

படத்தின் 2 வது டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஆகியவை படத்தின் மீதான அதிகரிப்பை மிகவும் அதிகரித்திருக்கிறது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும் தேவர்மகன் கெட்டப்பில் இந்த விழாவுக்கு கமல் வந்திருந்ததை சுட்டிக் காட்டி அதனையும் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


தூங்காவனம் - எதிர்பார்ப்பு அதிகம்...English summary
Kamal Haasan's Thoongavanam Audio Released today Along with the second trailer. Trailer was also played at the audio release function subsequently it was released on YouTube.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil