»   »  லயோலா கல்லூரிக்கு மிரட்டல்... நடிகர் சங்க பொதுக்குழு இடம் மாற்றம்!

லயோலா கல்லூரிக்கு மிரட்டல்... நடிகர் சங்க பொதுக்குழு இடம் மாற்றம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் நடக்கவிருந்த நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

அதே நேரம் நாளை பிற்பகல் நடிகர் சங்க வளாகத்தில் கூட்டம் நடக்கும் என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் இன்று தெரிவித்தார்.

Threat to Loyola College.. Nadigar Sangam GB venue changed

நடிகர் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் குழுக் கூட்டம் இன்று சென்னையில் உள்ள லயோலா கல்லூரியின் பெட்ரம் அரங்கில் நடக்கவிருந்தது. ஆனால் இந்த கூட்டம் லயோலா அரங்கில் நடக்கக் கூடாது என எதிர்ப்பாளர்கள் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்து வந்தனர்.

எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் இன்று திட்டமிட்டபடி போலீஸ் பாதுகாப்புடன் பொதுக் குழுக் கூட்டம் நடக்கும் என்று விஷால் அறிவித்திருந்தார்.

ஆனால் எதிர்பாராத விதமாக இந்தக் கூட்டத்துக்கு போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஷால் தரப்பு, பொதுக் குழுக்கூட்டம் நடக்கும் இடத்தை மாற்றியுள்ளது.

Threat to Loyola College.. Nadigar Sangam GB venue changed

புதிய திட்டப்படி, பொதுக் குழுக் கூட்டம் ஏற்கெனவே அறிவித்தபடி நாளை 2 மணிக்கு நடக்கும். ஆனால் நடைபெறும் இடம் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. தி நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்திலேயே நடக்கும் என பொதுச் செயலாளர் விஷால் அறிவித்தார்.

English summary
The venue of Nadigar Sangam's Annual General Body Meeting has suddenly changed after Loyola college denied permission.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil