Just In
- 4 min ago
கிஸ் வேணுமா.. நான் இன்னும் ப்ரஷ் பண்ணவே இல்ல.. சூட்டைக் கிளப்பும் சர்ச்சை நடிகையின் தாறுமாறு போட்டோ!
- 6 min ago
'அர்ஜுன் ரெட்டி' ஹீரோயினுக்கு ஆஹா லக்... இந்தியில் எந்த ஹீரோவுக்கு ஜோடியாகிறார் பாருங்க!
- 15 min ago
பொன்னியின் செல்வன்... அதிகாரப்பூர்வ நடிகர்கள் பட்டியல் வெளியீடு.. இத சொல்ல இத்தனை நாளா!
- 25 min ago
ஓவியா, யாஷிகா ஆனந்த், ஆஷிமா நர்வால் என வாழ்ந்திருக்கிறாரு ஆரவ்.. ராஜபீமா டிரைலர் ரிலீஸ்!
Don't Miss!
- News
ஸ்டெர்லைட் வழக்கு.. வேதாந்தாவின் வழக்குகளை நாளை மறுநாள் முதல் விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்
- Technology
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: நாளைமுதல் ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்
- Automobiles
புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்
- Education
பொறியியல் பட்டதாரிகளுக்கு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்! கைநிறைய ஊதியம்
- Lifestyle
நினைத்தது நிறைவேற, செல்வம் சேர 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டியவை!
- Sports
தீவிர மருத்துவ பரிசோதனை.. புவனேஸ்வர் குமார் அணியில் இருந்து நீக்கம்.. இளம் பவுலருக்கு வாய்ப்பு!
- Finance
இந்திய பொருளாதாரத்துக்கு ஒத்தடம் கொடுத்த நல்ல செய்தி..!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சசிகுமார் காட்டில் மழை.. பொங்கலுக்கு ரெண்டு படம்.. ஜனவரியில் மூனு படம் ரிலீஸ்!
சென்னை: இயக்குநரும் நடிகருமான சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள எம்.ஜி.ஆர் மகன் மற்றும் ராஜவம்சம் ஆகிய இரு படங்களும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நேற்று வெளியான எனை நோக்கிப் பாயும் தோட்டா மற்றும் அடுத்த சாட்டை படங்களில் நடித்திருந்த சசி குமார், அடுத்தடுத்து தனது படங்கள் வெளியாவதால் மகிழ்ச்சியில் உள்ளார்.
மேலும், கொம்பு வச்ச சிங்கம்டா படமும் ஜனவரி மாதம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
|
ரெண்டு லட்டு
சுப்பிரமணியபுரம், நாடோடிகள், சுந்தரபாண்டியன் என பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்து வரும் நடிகர் சசிகுமார் நடிப்பில் நேற்று எனை நோக்கிப் பாயும் தோட்டா மற்றும் அடுத்த சாட்டை படம் வெளியானது. எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தில் தனுஷுக்கு அண்ணனாகவும் போலீஸ் அதிகாரியாகவும் ஆங்கிலத்தில் பேசி நடித்து அசத்தியுள்ளார் சசிகுமார். அடுத்த சாட்டை படத்தில் ஆசிரியராக கெளரவ தோற்றத்தில் சில காட்சிகள் வந்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.
|
பொங்கல் ரேஸ்
வரும் பொங்கலுக்கு ரஜினியின் தர்பார் படம் வெளியாகவுள்ள நிலையில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள எம்.ஜி.ஆர் மகன் மற்றும் ராஜவம்சம் என இரு படங்கள் தர்பார் படத்துடன் பொங்கல் ரேசில் கலந்து கொள்கிறது. மேலும், பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் மற்றும் சிவாவின் சுமோ படமும் பொங்கலுக்கு ரிலீசாகிறது.
|
எம்.ஜி.ஆர் மகன்
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா என சிவகார்த்திகேயனை வைத்து ஹாட்ரிக் அடித்த பொன் ராம் தற்போது முதல்முறையாக சசிகுமார் நடிப்பில் எம்.ஜி.ஆர் மகன் படத்தை இயக்கியுள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பிறகு மீண்டும் பொன் ராம் இயக்கத்தில் நடிகர் சத்தியராஜ் இணைந்துள்ளார். காமெடி சரவெடியாக உருவாகியுள்ள எம்.ஜி.ஆர் மகன் பொங்கலுக்கு ரிலீசாகிறது.
|
ராஜவம்சம்
கே.வி. கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள ராஜவம்சம் திரைப்படமும் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.
|
கூடுதல் போனஸ்
பொங்கலுக்கு போனஸ் வழங்குறாங்களோ இல்லையோ, சசிகுமார், கூடுதல் போனஸாக ஜனவரி மாதம் கொம்பு வச்ச சிங்கம் டா படத்தையும் ரிலீஸ் செய்ய உள்ளார். எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா சபாஸ்டியன் நடித்துள்ளார்.