’என்ன வேணா பண்ணு நான் கவலைப்படல’..பிக்பாஸ் வீட்டில் ஸ்கோர் பண்ணும் ஜி.பி.முத்து

ஜி.பி.முத்துவை கையில் வைத்துக்கொண்டு எதிர் டீமை கலாய்க்கலாம் என்று நினைத்த 3 பெண்களின் டீமுக்கு கிடைத்தது பலத்த அடி.

ஜி.பி.முத்து பிக்பாஸுக்கு பெரிய கண்டெண்டாக இருக்கிறார். அவர்தான் அனைத்து இடங்களிலும் தெரிகிறார். இது எந்த சீசனிலும் இல்லாத ஒன்று.

ஜி.பி.முத்துவின் அறியாமையை பயன்படுத்த நினைத்தது டீம், ஆனால் அவரது நியாய உணர்வு அந்த டீமுக்கு கடும் எரிச்சலை தந்ததால் அனைத்தும் பணால்.

 ஸ்கோர் பண்ணும் ஜி.பி.முத்து

ஸ்கோர் பண்ணும் ஜி.பி.முத்து

ஜி.பி.முத்துவின் வெள்ளந்தியான நடத்தை, அவருடைய பேச்சு மற்றும் நட்பு பாராட்டும் பண்பு அவரும் அமுதவணனும் சேர்ந்து அடிக்கும் கூத்துகள் என கேமரா திரும்பும் பக்கம் எல்லாம் ஜி.பி.முத்துவே காட்சி அளிக்கிறார். பிக்பாஸ் வீடு ஒரு வகையான உளவியல் பரிசோதனை கூடம். இங்கு நாம் இந்த சமுதாயத்தில் மற்றவர்களுடன் எப்படி அனுசரித்து வாழ்கிறோம் மனநிலை மாற்றங்கள் என பல விஷயங்கள் உள்ளன. இதில் அனுபவம் உள்ளவர்கள், அனுபவம் இல்லாதவர்கள், மேல் தட்டு வர்க்க மனநிலையில் வருபவர்கள், சாதாரண பின்னணியில் இருந்து வருபவர்கள் என்று பலவிதமான கலவையான மனநிலையை பார்க்கலாம்.

அனுபவக்குறைவு மோதல் மன நிலையில் ஆயிஷா, தனலட்சுமி, ஜனனி

அனுபவக்குறைவு மோதல் மன நிலையில் ஆயிஷா, தனலட்சுமி, ஜனனி

வயது குறைவு, அனுபவ குறைவு காரணமாக தங்களுக்கு கிடைத்த அனுபவம் மட்டுமே வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டு செயல்படும் ஆயிஷா, தனலட்சுமி, ஜனனி மூவரும் பிக் பாஸ் வீட்டில் சில நாட்களாக செயல்படுவது தெரிகிறது. இவர்களை விஷபாட்டில் டீம் என அழைக்க ஆரம்பித்து விட்டனர். ரிவ்யூ மீட்டிங் என்பது சாதாரணமாக இருக்கும் பிரச்சனைகளை சொல்லி தீர்த்துக் கொள்வது. ஆனால் கழுத்தை அறுத்து காலி செய்வது என்கிற மனநிலையில் இவர்கள் மூவரும் செயல்படுவதை காண முடிகிறது. இதில் இவர்களின் குழுவில் இருக்கும் ஜி.பி.முத்து, மணிகண்டன் இருவரும் நடுநிலைவாதிகளாக அனைவரிடமும் நட்புடன் பழகி வருகின்றனர். சில நேரங்களில் இவர்கள் குழுவாக செயல்படுகிறோம் என்று ஜி.பி.முத்துவை இழுத்து தவறாக வழி நடத்துவதும் அதற்கு பிரச்சினை என்னவென்று தெரியாமல் ஜி.பி.முத்து இரையாவதும் பிறகு நியாயத்தை உணர்ந்து டக் என்று நியாயம் இருக்கும் பக்கம் சேர்வதாலும் அந்த குழுவில் இருக்கும் அனைவருக்கும் ஜி பி.முத்து மீது கடுமையான கோபம் வருகிறது.

 சாம்பார் பிரச்சினையை கிளப்பிய தனலட்சுமி, ஸ்கோர் பண்ணிய ஜி.பி.முத்து

சாம்பார் பிரச்சினையை கிளப்பிய தனலட்சுமி, ஸ்கோர் பண்ணிய ஜி.பி.முத்து

இதன் ஒரு வெழிப்பாடு தான் சாம்பார் பிரச்சினை. கஷ்டப்பட்டு வேலை செய்து கொண்டிருக்கும் கிச்சன் டீமிடம் சென்று தேவையில்லாமல் தனலட்சுமி இரவுக்கு தனியாக சாம்பார் வைக்க வேண்டியது தானே என்று கேட்க அது பெரிய பிரச்சினையாக மாறிப்போனது. இதில் ஜி.பி.முத்து விவரம் புரியாமல் மதியம் வைக்கும் சாம்பார் இரவு நன்றாக இருக்காது என்று சொன்னவுடன் தங்கள் பக்கம் சேர்ந்து விட்டார் என்று தனலட்சுமி சந்தோஷமாக அவரையும் வைத்துக்கொண்டு சண்டை போட, ஒரு கட்டத்தில் அமுதவாணன் ஜி.பி.முத்து இருவரும் சேர்ந்து சாம்பாரில் முருங்கக்காய் இருந்தால் தான் நன்றாக இருக்கும் என்று ஜி.பி.முத்து கிராமியப் பணி பேச அது காமெடியாக மாறிப்போனது. இது தனலட்சுமிக்கு பிடிக்கவில்லை. திடீரென்று ஜி.பி முத்து ஸ்கோர் செய்தவுடன் அவரை பார்க்கவே கடுப்பாக இருக்கிறது என்று கேமராவை பார்த்து சொன்னார் தனலட்சுமி.

 ஜி.பி.முத்து மீது கொலை வெறியில் இருந்த தனலட்சுமி

ஜி.பி.முத்து மீது கொலை வெறியில் இருந்த தனலட்சுமி

ஒரு கட்டத்தில் ஜி.பி.முத்துவுக்கு எதிராகவே அவர் செயல்பட தொடங்கி விட்டார். ரிவ்யூ கூட்டத்தில் ஜி.பி.முத்து நாங்கள் போட்டிருக்கும் சட்டை இந்த கலராக இருந்தாலும் மற்ற டீமில் உள்ளவர்கள் கீழே விழுந்தால் தூக்கி விடுவோம் அதுதான் நட்பு என்று பேச கடுப்பான தனலட்சுமி ஜி.பி.முத்துவுடன் நேரடியாக மோதலில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஏம்மா நீ என்ன இப்படி பேசுற சாதாரணமாக ஜி.பி.முத்து கேட்க, என்னை எப்படி நீ வா போ என்று எப்படி சொல்லலாம் என்று தனலட்சுமி சண்டைபிடித்து நீ நடிக்கிறாய் என்று ஜி.பி.முத்துவைப்பார்த்துச் சொல்ல கடுமையான கோபத்துக்குள்ளான ஜி.பி.முத்து கேமரா முன் வந்து என்னை நடிக்கிறார் என்கிறார் என்று சொல்ல பிரச்சனை பெரிதாக ஆனது.

 தக் லைஃப் மாஸ்டர் ஜி.பி.முத்து

தக் லைஃப் மாஸ்டர் ஜி.பி.முத்து

ஜிபி.முத்து டீம் பெண் போட்டியாளர்களின் நிலை பரிதாபகரமாக மாறியது. பொதுவாக ஜிபி.முத்து போன்றவர்கள் மனதில் பட்டதை பேசக் கூடியவர்கள் அதில் நியாயம் எந்த பக்கம் இருக்கிறது என்று அதைத்தான் பார்ப்பார்கள். தவிர கோஷ்டியாக சேர மாட்டார்கள். இதை உணராமல் தங்களுக்கு ஆதரவாக கண்ணை மூடிக்கொண்டு பேசுவார் என்று நினைத்த தனலட்சுமி, ஆயிஷா, ஜனனி போன்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனுடைய வெளிப்பாடுதான் ஜி.பி.முத்துவுடன் தனலட்சுமி சண்டைக்கு போனது. இது தனலட்சுமிக்கு பேக்ஃபயர் என்பது தெரியாமல் அவர் ஜி.பி.முத்துவுடன் சண்டை போட்டதுதான். ஜி.பி.முத்து வழக்கம் போல தக்லைஃப் மாஸ்டர் ஆக ஸ்கோர் பண்ணிக் கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X