»   »  தெறி.. தலைப்பு - டிசைன் பார்த்து விஜய் ரசிகர்கள் பரவசம்... 'செம' வரவேற்பு!

தெறி.. தலைப்பு - டிசைன் பார்த்து விஜய் ரசிகர்கள் பரவசம்... 'செம' வரவேற்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்று கார்த்திகை தீபம். கிட்டத்தட்ட இரண்டாவது தீபாவளி எனும் அளவுக்கு சந்தோஷத்தில் திளைக்கிறார்கள் விஜய்யின் ரசிகர்கள்.

காரணம் விஜய்யின் புதிய படத்தின் தலைப்பும் டிசைனும் பர்ஸ்ட் லுக்கும் இன்று வெளியானதுதான்.

தெறி என்ற படத் தலைப்பும், அதை நேர்த்தியாகவும் ஸ்டைலிஷாவும் வடிவமைத்த விதமும் அனைத்து விஜய் ரசிகர்களுக்கும் பிடித்துவிட்டது. அத்துடன் படத்தில் விஜய்யின் தோற்றம் எப்படி இருக்கும் என்பதையும் இரண்டு படங்களை வெளியிட்டு தெரிவித்துவிட்டனர்.

Thunderous response for Vijay's Theri

விஜய் இந்தப் படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக, அதிரடி அதிகாரியாக வருகிறார். அவரது தோற்றம் ஒரு போலீஸ் அதிகாரிக்குரிய மிடுக்குடனும் கம்பீரத்துடனும் உள்ளது.

தற்போது சமூக வலைதளங்களில் ‘தெறி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வேகமாக பரவி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார்.

English summary
Vijay's new movie 'Theri' title design and first look is getting superb response from fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil