Don't Miss!
- News
"மீன் நழுவுதே".. இதான் காரணமா.. பாஜகவின் "சதுரங்க ஆட்டம்".. டெல்லி பறந்த மேட்டர்.. எடப்பாடிக்கு பிளஸ்
- Finance
அதானி குழுமத்தின் தணிக்கை குழு சர்ச்சை.. அதானி சொல்லும் விளக்கத்தை பாருங்க!
- Lifestyle
இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எவராலும் செய்ய முடியாத அசாத்திய சாதனையை செய்துள்ளார்... என்ன சாதனை தெரியுமா?
- Automobiles
எந்த ஸ்கூட்டரிலும் இவ்ளோ பெரிய-அகலமான டயரை பார்க்க முடியாது.. சொன்னபடியே விற்பனைக்கு வந்தது ஸும் ஸ்கூட்டர்!
- Sports
என்னங்க சொல்றீங்க.. இந்திய வீரர் முரளி விஜய் ஓய்வு அறிவிப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன தெரியுமா??
- Technology
தங்க முட்டை போடும் பாக்டீரியா.! ஜூம் செய்து பார்த்து ஆடிப்போன விஞ்ஞானிகள்.! அது Egg இல்ல.!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
துணிவு ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்.. இருப்பது ஒரு லைஃப்.. தெறிக்கும் ’சில்லா சில்லா’ புயல்.. அஜித் மாஸ்
சென்னை: தல என்று அழைக்க வேண்டாம்.. ஏகே என்றே அழையுங்கள் என அஜித் அன்பு கட்டளை போட்டாலும் தற்போது வெளியாகி உள்ள துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'சில்லா சில்லா' பாடல் லிரிக் வீடியோவை பார்த்த ரசிகர்கள் 'தல டக்கர்டோய்' என்றே சோஷியல் மீடியாவில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.
இயக்குநர் ஹெச். வினோத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து துணிவு படத்தில் ஹாட்ரிக் அடித்துள்ளார் நடிகர் அஜித்.
வரும் பொங்கல் 2023ல் விஜய்யின் வாரிசு படத்துடன் துணிவு மோத உள்ள நிலையில், ஃபர்ஸ்ட் சிங்கிள் போட்டியும் எப்படி இருக்கும் என ரசிகர்களால் உன்னிப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.
துணிவு
டூப்
நடிகர்
போட்டோவால்
வெடித்த
சர்ச்சை..
பிகில்
டூப்பை
தோண்டி
எடுத்து
அஜித்
ரசிகர்கள்
சண்டை!

தூள் கிளப்பும் துணிவு
வலிமை படம் நீண்ட காத்திருப்புக்கு பின்னர் வெளியான நிலையில், அஜித் ரசிகர்களை அவ்வளவாக திருப்திப்படுத்தவில்லை. உடனடியாக இயக்குநரை மாற்ற வேண்டாம் என நினைத்த அஜித் மீண்டும் இயக்குநர் ஹெச். வினோத்துக்கு வாய்ப்பு அளித்து துணிவு படத்தில் நடித்துள்ளார். சிறுத்தை சிவா விவேகம் படத்திற்கு பிறகு எப்படி விஸ்வாசம் ஹிட் கொடுத்தாரோ அதே போல துணிவும் தூள் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில்லா சில்லா ரிலீஸ்
"இருப்பது ஒரு லைஃப்" என ஆரம்பிக்கும் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான சில்லா சில்லா பாடல் வெறித்தனம் காட்டுகிறது. நடிகர் அஜித் செம மாஸாக டான்ஸ் ஆடும் காட்சிகளும் லிரிக் வீடியோவில் இடம்பெற்று ரசிகர்களை உற்சாகத்தில் ஆட்டம் போட வைத்துள்ளது.

தல டக்கர்டோய்
பாடலாசிரியர் வைசாக் வரிகளில் உருவாகி உள்ள சில்லா சில்லா பாடலில் "கல்லை கண்டால் நாய் gone", "உள்ளுக்குள்ள ஃபயரு.. தெறிச்சு ஓடும் ஃபியரு.. பின்னாடி பேசுறவன் எல்லாம் கிழிஞ்ச டயரு" என வரிகளும் செம ஃபயராக இடம்பெற்றுள்ளன. 3 நிமிடம் 53 நொடிகள் வெகு விரைவாக ஓடக் கூடிய இந்த பாடல் நிச்சயம் தியேட்டரில் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் என்பது கன்ஃபார்ம்.

ரஞ்சிதமே ரெக்கார்டு முறியடிக்குமா
வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ரஞ்சிதமே பாடல் இதுவரை 85 மில்லியன் வியூஸை கடந்து அபார சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், ரஞ்சிதமே பாடலின் ஒரு மணி நேர சாதனை, 24 மணி நேர சாதனைகளை சில்லா சில்லா பாடல் முறியடிக்குமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. அஜித் ரசிகர்கள் அசுர சாதனையை படைக்க வெறித்தனம் காட்டி வருகின்றனர்.

50வது படம்
இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு துணிவு படம் 50வது ஸ்பெஷல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் குரலில் அஜித் அசத்தல் நடனம் ஆட இப்படியொரு பாடல் அமைக்கும் வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் போனி கபூருக்கும் இயக்குநர் ஹெச். வினோத்துக்கும் நடிகர் அஜித்துக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ஜிப்ரான்.

அனிருத் வேறலெவல்
வேதாளம் படத்தில் அஜித்துக்கு 'ஆலுமா டோலுமா' பாட்டுப் போட்டு தெறிக்கவிட்ட இசையமைப்பாளர் அனிருத் இந்த முறை ஜிப்ரான் இசையில் அஜித்துக்கு 'சில்லா சில்லா' பாடலை பாடி பட்டையை கிளப்பி உள்ளார். அனிருத் பாடினாலே அந்த பாடல் இதுவரை ஹிட்டு தான் என்கிற ரெக்கார்டு உள்ள நிலையில், சில்லா சில்லா பல ரெக்கார்டுகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.