»   »  காவல்துறைக்கே ஐடியா தரும் 'துப்பறிவாளன்' - ட்ரெய்லர் வெளியீடு!

காவல்துறைக்கே ஐடியா தரும் 'துப்பறிவாளன்' - ட்ரெய்லர் வெளியீடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள 'துப்பறிவாளன்' படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் விஷால் டிடெக்டிவ்வாக நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் பிரசன்னா, ஆன்ட்ரியா, அனு இமானுவேல், வினய் ராய், கே.பாக்யராஜ் தலைவாசல் விஜய், ஜான் விஜய் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். சிறப்புத் தோற்றத்தில் இயக்குநர் மிஷ்கினும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.

Thupparivaalan trailer out now
பிக் பாஸ் ஓவியா- கவுதம் கார்த்திக் ஜோடியாகிறார்-வீடியோ

விஷால் ஃபிலிம் பேக்டரி மற்றும் நந்தகோபால் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். அரோல் கொரேலி இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

மிஷ்கின் எழுதிப் பாடிய 'இவன் துப்பறிவாளன்' பாடலின் லிரிக்கல் வீடியோ மற்றும் படத்தின் மேக்கிங் வீடியோ ஆகியவை ஏற்கெனவே வெளியிடப்பட்டன. U/A தணிக்கைச் சான்றிதழ் பெற்றிருக்கும் 'துப்பறிவாளன்' திரைப்படம் வரும் செப்டம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ளது.

English summary
The official trailer of the film 'Thupparivaalan' which was lead by Vishal is released now.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil