»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

தமிழன் படம் படு பயங்கரமான விலைக்கு விற்று விட்டதாம். அதுவும் பூஜை போட்ட தினத்தன்றே. விஜய் படங்களிலேயே இதுதான் அதிக விலைக்குப் போன படமாம். பாடல்களும் நன்றாக வந்திருப்பதாக இப்போது பேசிக் கொள்கிறார்கள்.

காதலுக்கு மரியாதை நடிகையின் வீட்டில், வசுந்தரமான பெங்களூர் நடிகையால் ஏற்பட்ட புயல் தற்போது சற்றே ஓய்ந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் நடிக்க நாயகனிடம் அனுமதி கேட்டுள்ளாராம் நடிகை.

படமே வராவிட்டாலும் கூட வயதான ஹீரோக்களுடன் நடிப்பதில்லை என்ற முடிவில் தீவிரமாக இருக்கிறாராம் ஜோதிகா. விதி விலக்காக விஜயகாந்த்துடன் ஒரு படத்தில் நடிக்கிறார். ஆனால் இதில் டப்பு ரொம்பவே அதிகமாம்.

நடனப் புயல் நடிகரின் மன்மத லீலைகள் அதிகரித்துக் கொண்டே வருவதால் அவரது படம் என்றால் தூர ஓடுகிறார்களாம் சில முன்னணி நடிகைகள். இதனால் அவருக்கு படத்துக்குப் படம் புது நடிகைகள் புக் ஆகிறார்களாம்.

கல்கி பகவானின் தீவிர பக்தரான காமடி நடிகர் தாமு, இப்போது "அம்மா"வின் தீவிர பக்தர் ஆகி விட்டார். ஏற்கனவே அதிமுக உறுப்பினராகி தொண்டராகி விட்டவர். சமீபத்திய ஆண்டிப்பட்டி தேர்தலில் ஜெயலலிதாவுக்காக பிரசாரம் மேற்கொண்டார். எம்.ஜி.ஆர். போல மாறு குரலில் பேசி அசத்தினார். அதிமுக பிரகர்களுக்கு இணையாக முன்னணி மாலை தினசரிகளில் அரைப்பக்கம் அளவுக்கு விளம்பரம் கொடுத்து அசத்தி விட்டார் தாமு. ஜெயலலிதா ஆண்டிப்பட்டி தேர்தலில் வெற்றி பெற்றதை வாழ்த்தி ஒரு விளம்பரம், முதல்வராக பதவியேற்கும் நாளில் ஒரு விளம்பரம் என கலக்கினார் தாமு.

Read more about: actress, film, hero, movie, music, song, tamilan, tamilnadu, vijay
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil