Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ஹேப்பி பர்த் டே பேபிஸ்...இவங்க தான் இன்று பிறந்தநாள் கொண்டாடும் ப்யூட்டீஸ்
சென்னை : தங்களின் ஃபேவரைட் ஹீரோக்களின் பிறந்தநாளை எப்படி மறக்காமல் ரசிகர்கள் கொண்டாடுகிறார்களோ, அதே போல் கனவு கன்னிகளாக தாங்கள் நினைத்து உருகும் ஹீரோயின்களின் பிறந்தநாளையும் சமீப காலமாக கொண்டாட துவங்கி விட்டனர் ரசிகர்கள்.
2021ல்
வெளியான
மிகச்
சிறந்த
3
காமெடி
திரைப்படங்கள்...
ஜாலியான
திரைக்கதை
இயக்குனர்கள்
டாப் ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களின் பெயர்களிலும் ஹாஷ்டேக்குகள் உருவாக்கி, டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர். இதில் நடிகைகளுக்கு பிறந்த நாள் வாழ்த்தும் கூறி வருகின்றனர். அப்படி இன்று எந்தெந்த நடிகைகள் பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள் என இங்கே பார்ப்போம்.

இன்று பிறந்த ப்யூட்டிகள்
நடிகைகள் தமன்னா, ஆன்டிரியா, மகிமா நம்பியார் ஆகியோர் இன்று தங்களின் பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள். இவர்களுக்கு திரையுலக நண்பர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சோஷியல் மீடியா மூலம் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

தமன்னா
தமிழ், தெலுங்கு, இந்தியில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் தமன்னா. தமிழில் கேடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். கல்லூரி படத்திற்கு பிறகு கவனிக்கப்படும் நடிகையான தமன்னா, தமிழில் விஜய், அஜித், தனுஷ், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட டாப் ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்து விட்டார். பெட்ரோமாஸ், விஷால் நடித்த ஆக்ஷன் படங்களுக்க பிறகு இந்தி மற்றும் தெலுங்கில் அதிக அளவில் பட வாய்ப்புக்கள் குவிந்ததால் பிஸியான நடிகையாகி விட்டார். தெலுங்கில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார்.

ஆன்டிரியா
நடிகை, பின்னணி பாடகி, டப்பிங் கலைஞர் என பல முகங்களையும், திறமைகளையும் கொண்டவர் ஆன்டிரியா. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரபலமான நடிகையாக இருக்கும் ஆன்டிரியா, சரத்குமார் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அழகாலும், கிளாமராலும் ரசிகர்களை கவர்ந்துள்ள ஆன்டிரியா, மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை 2, தரமணி உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது பிசாசு 2 உள்ளிட்ட ஆறுக்கும் மேற்பட்ட படங்களில் ஆன்டிரியா நடித்து வருகிறார்.

மகிமா நம்பியார்
தமிழ், மலையாள பட நடிகையான மகிமா நம்பியார், சாட்டை படத்தில் அறிவழகி என்ற கேரக்டரில் அழகாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர். என்னமோ நடக்குது, மொசக்குட்டி, குற்றம் 23, அண்ணாதுரை, கொடிவீரன், மகாமுனி, அசுரகுரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ஐங்கரன், ஓ மை டாக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.