“தந்தையர் தினம்“.. திரைப்பிரபலங்களின் அப்பாவை பார்த்துள்ளீர்களா? இதோ புகைப்படம் !

சென்னை : அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, அத்தை, மாமா என்று எத்தனையோ உறவுகளும், அந்த உறவுகளின் உணர்வுகளும் தான் மனித வாழ்க்கையின் மகத்துவமான அடித்தளம்.

தொழில்நுட்ப வளர்ச்சியாலும், நாகரீகத்தின் மாய மோகத்தாலும் பல சந்தோஷங்களை தொலைத்து வருகிறோம். ஆனால் அப்பா என்னும் உறவும், அதன் உணர்வுகளும் உயிர் இருக்கும் வரை நினைத்து உருக வைப்பவை.

உலகெங்கிலும் உள்ள தந்தையர்களை கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

தந்தையர் தினம்

தந்தையர் தினம்

தந்தையின் அன்பு, உழைப்பு, அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்து பாராட்டி அவர்களுக்கு அன்பு செலுத்தவே தந்தையர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினத்தில் திரைப்பிரபலங்கள் பலர் தங்கள் தந்தையருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகை சினேகா

நடிகை சினேகா

புன்னகை அரசி சினேகா, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது நடிகை சினேகா தனது அப்பாவிற்கு தந்தையர் தின வாழ்த்து கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்த காஜல் அகர்வால் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். காதலரான கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்து கொண்ட காஜல் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். நடிகை காஜலில் தந்தையின் புகைப்படம்.

சாக்ஷி அகர்வால்

சாக்ஷி அகர்வால்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான சாக்ஷி அகர்வால், தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

சிரஞ்சீவி

சிரஞ்சீவி

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது தந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு, நன்றியுள்ள மகனாகவும், பெருமைமிக்க தந்தையாகவும் இருப்பது ஒரு பெரிய உணர்வு என கூறியுள்ளார்.

மகேஷ்பாபு

மகேஷ்பாபு

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு தனது ட்விட்டர் பக்கத்தில், நீங்கள் முன்னுதாரணமாக வழிநடத்தி, தந்தை என்றால் என்னவென்று எனக்குக் காட்டியுள்ளீர்கள்.. நீங்கள் இல்லாமல் நான் இருந்திருக்க மாட்டேன்.. தந்தையர் தின வாழ்த்துக்கள் 'நன்னா' என பதிவிட்டுள்ளார்.

அல்லு அர்ஜூன்

அல்லு அர்ஜூன்

தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜூன் தனது தந்தை அல்லு அரவிந்த் அவர்களின் புகைப்படத்தை பகிர்ந்து தந்தையர் தினம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜூன் புஷ்பா திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார். விஜய்யின் 'தளபதி 67' படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக அல்லு அர்ஜுன் படத்தை லோகேஷ் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதயத்தை பரிசளித்த அமிதாப்

இதயத்தை பரிசளித்த அமிதாப்

நடிகர் அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா பச்சன் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும்,ஷஹேன்ஷா திரைப்படத்தின் உரையாடலை மேற்கோள் காட்டி தந்தையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவிற்கு அமிதாப், இதயங்கள் மற்றும் ரோஜாக்களை பரிசாக அளித்துள்ளார்.

ஜான்வி கபூர்

ஜான்வி கபூர்

போனிகபூர் ஸ்ரீதேவின் மகளான ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தந்தையர் தினத்தை முன்னிட்டு தந்தை போனிகபூருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X