»   »  இன்று குற்றமே தண்டனை, கிடாரி ரிலீஸ்!

இன்று குற்றமே தண்டனை, கிடாரி ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்று வெள்ளிக்கிழமை நான்கு நேரடி தமிழ்ப் படங்களும், ஜாக்கிசானின் ஸ்கிப் ட்ரேஸ் படத்தின் தமிழாக்கமும் வெளியாகின்றன.

இவற்றில் குற்றமே தண்டனை, கிடாரி படங்கள் எதிர்ப்பார்ப்புக்குரியதாக உள்ளன.


குற்றமே தண்டனை

குற்றமே தண்டனை

காக்கா முட்டை படத்தைத் தந்த மணிகண்டன் இயக்கியுள்ள அடுத்த படம் இது. இளையராஜாவின் இசை என்பதால் படத்துக்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது. சமீபத்தில் மாநிலத்தை அதிர வைத்த சுவாதி கொலைச் சம்பவம்தான் படத்தின் கதை என்பது இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம். கிட்டத்தட்ட 200 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.


கிடாரி

கிடாரி

சசிகுமார் நடிப்பில், அவரது சொந்த நிறுவனம் கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வரும் படம் கிடாரி. தெரிந்த ஹீரோயின், காமெடியன், இசையமைப்பாளர் என்று எதுவும் இல்லாமல் வெளியாகிறது இந்தப் படம். சசிகுமாரை நம்பித்தான் இந்தப் படத்தை வாங்கியுள்ளனர். 250 ப்ளஸ் அரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படம் விழுந்தால், சசிகுமார் எழுவது ரொம்பவே கஷ்டம்.


இளமை ஊஞ்சல்

இளமை ஊஞ்சல்

மங்கை அரிராஜன் இயக்கத்தில் நீண்ட கால தயாரிப்பில் இருந்த இப்படம் கிளாமரை நம்பி இன்று திரைக்கு வருகிறது. நமீதா உள்பட நான்கைந்து நாயகிகள் படத்தில் உள்ளனர்.


தகடு

தகடு

புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்தை எம் தங்கத்துரை இயக்கியிருக்கிறார். இன்றைய ரீலீசில் இப்படமும் உண்டு.


மிரட்டும் இருட்டு

மிரட்டும் இருட்டு

Dont Breathe எனும் ஹாலிவுட் படம், தமிழில் மிரட்டும் இருட்டு என டப்பாகி வெளியாகிறது. சுமார் 150 திரைகளில் வெளியாகிறது.


இருகில்லாடிகள்

இருகில்லாடிகள்

ஜாக்கிசான் நடித்து அண்மையில் வெளியான Skip Trace எனும் ஆங்கிலப் படம் தமிழில் இரு கில்லாடிகளாக வெளியாகிறது.


ஜனதா கேரேஜ்

ஜனதா கேரேஜ்

மோகன்லால் நடித்துள்ள முதல் தெலுங்குப் படம் ஜனதா கேரேஜ். மிகவும் எதிர்ப்பார்ப்புக்குரிய இந்தப் படம் சென்னையில் மட்டுமே 30 அரங்குகளில் வெளியாகியுள்ளது. கொரட்லா சிவா இயக்கியுள்ளார்.


English summary
Today there are 4 Tamil movies released all over the state.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil