»   »  தெறிக்கு முன்னால் சசிகுமாரின் வெற்றிவேல் தாக்குப்பிடிக்குமா?

தெறிக்கு முன்னால் சசிகுமாரின் வெற்றிவேல் தாக்குப்பிடிக்குமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று 'வெற்றிவேல்', 'என்னுள் ஆயிரம்', 'குகன்' ஆகிய 3 படங்கள் வெளியாகியுள்ளன.

சசிகுமாருக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்திருக்கும் 'வெற்றிவேல்' படத்தை, லைக்கா நிறுவனம் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிட்டுள்ளது.


இந்நிலையில் விஜய்யின் தெறிக்கு முன் இந்த 3 படங்களும் தாக்குப் பிடிக்குமா? என்பதை இங்கே பார்க்கலாம்.


வெற்றிவேல்

வெற்றிவேல்

'தாரை தப்பட்டை' படத்திற்குப் பின் சசிகுமார் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் 'வெற்றிவேல்'. சசிகுமார், மியா ஜார்ஜ், பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை சுமார் 300 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிட்டுள்ளது. 'வெற்றிவேல்' சசிகுமாருக்கு வெற்றியைத் தருமா? பார்க்கலாம்.


குகன்

குகன்

'வண்ணத்துப்பூச்சி' படத்தை இயக்கிய அழகப்பன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். அரவிந்த், சுஷ்மா பிரகாஷ், சிங்கம்புலி, நரேன் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு குரு கல்யாண் இசையமைத்திருக்கிறார். மிகக்குறைந்த தியேட்டர்களில் வெளியாகியிருக்கும் 'குகன்' மற்ற படங்களுக்கு முன்னால் தாக்குப் பிடிக்குமா? என்பது சந்தேகம் தான்.


என்னுள் ஆயிரம்

என்னுள் ஆயிரம்

நடிகர் டெல்லி கணேஷின் மகன் மகா நாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம் 'என்னுள் ஆயிரம்'. மகா, வின்சென்ட் அசோகன் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தை கிருஷ்ண குமார் இயக்கியிருக்கிறார். மகனின் ஹீரோ ஆசையை நிறைவேற்ற டெல்லி கணேஷ் சொந்தமாக இப்படத்தை தயாரித்திருக்கிறார்.தயாரிப்பாளராக டெல்லி கணேஷ் ஜெயிப்பாரா?


தெறி

தெறி

விஜய்யின் 'தெறி' நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், இந்த 3 படங்களுக்கும் எந்தளவு வரவேற்பு கிடைக்கும் என்பது தெரியவில்லை.
3 படங்களில் சசிகுமாரின் 'வெற்றிவேல்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஓரளவு எதிர்பார்ப்பு உள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை 'வெற்றிவேல்' நிறைவேற்றி அவரை வெற்றி நாயகனாக மாற்றுமா? என்று பார்க்கலாம்.


English summary
Today Released Movies List - Vetrivel, Gugan, Ennul Aayiram.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil