»   »  இன்றைய ரிலீஸ்... கதிரவனின் கோடை மழை, காகித கப்பல்!

இன்றைய ரிலீஸ்... கதிரவனின் கோடை மழை, காகித கப்பல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தீபாவளிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையான இன்று 3 தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன. அவை கதிரவனின் கோடை மழை, காகித கப்பல், நீ என்பது...

கதிரவனின் கோடை மழை ஏற்கெனவே ரிலீசாகி பாராட்டுகளைப் பெற்ற படம். ஆனால் அந்த பாராட்டுகள் வசூலைத் தரவில்லை. எனவே ரீ ரிலீஸ் ஆகிறது.

தனுஷ் தம்பி

தனுஷ் தம்பி

இதில் நாயகனாக நடித்துள்ள கண்ணன் நடிகர் தனுஷின் சித்தப்பா மகன். அதாவது கஸ்தூரி ராஜாவின் தம்பி சேதுராமனின் மகன். தனுஷுக்கு தம்பி உறவு. நாயகியாக ஸ்ரீபிரியங்கா எனும் ஸ்ரீஜா நடித்திருக்கிறார். அண்ணனாக இயக்குநர் மு.களஞ்சியம் நடித்திருக்கிறார். கதிரவன் இயக்கியுள்ளார்.

காகித கப்பல்

காகித கப்பல்

எஸ் சிவராமன் என்பவர் இயக்கியுள்ள படம் காகித கப்பல். நாயகனாக அப்புக்குட்டி, நாயகியாக புதுமுகம் தில்லிஜா அறிமுகமாகிறார். எவர்கிரீன் இன்டர்நேஷனல் சார்பில் விஏ துரை வெளியிடுகிறார்.

நீ என்பது...

நீ என்பது...

ஏஆர் ரஹீம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நிறைய புதுமுகங்கள். ரவி கே மேனன் இசையமைத்துள்ளார். அப்துல் ரஹ்மான் தயாரித்துள்ளார்.

நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க

நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க

இந்தப் படம் மலைகிராமத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. கோனூர் ராஜேந்தர், சம்பத்குமார் என இரட்டையர்கள் இயக்கியுள்ளனர்.

இந்தப் படங்கள் எல்லாமே சின்ன பட்ஜெட் படங்கள். பெரிய அறிமுகமில்லாதவை. குறைந்த அரங்குகளில் வெளியாகின்றன. தீபாவளி கேப்பை ஃபில் பண்ண வரும் படங்கள்.

English summary
Here are the list of new movies releasing Today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil