தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி காலமானார்!

ஆந்திரா : தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி உடல் நலக்குறைவு காரணமாக சற்று முன் காலமானார்.

மகேஷ் பாபுவின் தாயார் உயிரிழந்தது திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அவரது வீட்டிற்கு விரைந்துள்ளனர்.

இந்திரா தேவி உடல் பத்மாலயா ஸ்டுடியோவில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மகேஷ் பாபுவின் தாயார்

மகேஷ் பாபுவின் தாயார்

பழம்பெரும் நடிகர் கிருஷ்ணாவின் மனைவியும், மகேஷ் பாபுவின் தாயாருமான கட்டமனேனி இந்திரா தேவி சற்று முன் காலமானார். கடந்த சில நாட்களாக வயது மூப்பு தொடர்பான உடல்நிலை பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். இவருக்கு கடந்த சில வாரங்களான மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அதிகாலை காலமானார்

அதிகாலை காலமானார்

நேற்றிரவு அவருக்கு மூச்சுத்திணறல் அதிகரித்ததை அடுத்து சிறிது நேரம் அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தார். வென்டிலேட்டருக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை, இதையடுத்து இன்று அதிகாலை 4 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது. கடந்த ஒரு வாரமாக ஏஐஜி மருத்துவமனையில் இருந்த அம்மாவை மகேஷ் பாபு பல முறை நேரில் சென்று பார்த்துள்ளார்.

பல ஆண்டுகள் தனிமையில்

பல ஆண்டுகள் தனிமையில்

பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா, இந்திராதேவி பிரிந்து விஜயநிர்மலாவை மணந்த பிறகு, இந்திராதேவி தனிமையில் பல ஆண்டுகளாக இருந்துள்ளார். அவரின் மகன் மகேஷ் பாபு மட்டும் அம்மாவை அடிக்கடி வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். மகேஷ் பாபுவின் மூத்த சகோதரர் ரமேஷ் பாபு மறைந்த காயமே இன்னும் ஆறாத நிலையில், மகேஷ் பாபு தற்போது தனது அன்புக்குரிய தாயாரை இழந்து சோகத்தில் மூழ்கி உள்ளார்.

நாளை மறுதினம் இறுதி சடங்கு

நாளை மறுதினம் இறுதி சடங்கு

இந்திராதேவியின் உடல் பத்மாலயா ஸ்டுடியோவில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. இறுதி சடங்கு மறுதினம் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்திராதேவியின் மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரபலங்கள் இரங்கல்

பிரபலங்கள் இரங்கல்

மகேஷ் பாபுவின் தாயாரின் மறைவுக்கு அவரது ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஒரு இணையவாசி இந்திரம்மாவின் ஆத்மா சாந்தியடையட்டும் அண்ணாயா urstrulyMahesh எப்போதும் உங்களுடன் இருப்பார். மகேஷ்பாபு அம்மாவின் மறைவு வருத்தமளிக்கிறது கட்டமனேனி குடும்பத்தினருக்கும் நலம் விரும்பிகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X