»   »  அழகான 3 நாயகிகளுடன் அசத்தப் போகும் "வெற்றிவேல்" - நாளை பாடல்கள் ரிலீஸ்

அழகான 3 நாயகிகளுடன் அசத்தப் போகும் "வெற்றிவேல்" - நாளை பாடல்கள் ரிலீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜில்லா திரைப்படத்தின் இயக்குனர் நேசமணியிடம் உதவி இயக்குனாரக இருந்த வசந்தமணி இயக்கத்தில் வெளியாகவுள்ள ஒரு குடும்பத் திரைப்படம் தான் வெற்றிவேல்.

இத்திரைப்டத்தில், சசிக்குமார், பிரபு, தம்பி ராமையா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் டி இமான்.

சசிகுமார் தாரை தப்பட்டை படப்பிடிப்பு முடியும் முன்னரே வெற்றிவேல் படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார். பல வெற்றித் திரைப்படங்களை தயாரிக்கும் ஆர் ரவீந்தர் தான் வெற்றிவேல் படத்தினையும் தயாரிக்கின்றார்.

தஞ்சாவூர், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கிராம புறங்களில் தான் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்பொழுது இப்படப்பிடிப்பு முடிந்து இத்திரைப்படத்தின் பாடல்கள் நாளை வெளியாகவுள்ளது.

வெற்றிவேல் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் அதன் விவரங்களையும் அப்படத்தின் இசையமைப்பாளர் இமான் வீடியோ செய்தி மூலம் கூறியிருக்கின்றார். அதை சசிக்குமார் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இப்படத்தின் இசை வெளியீடு நாளை நடைபெறுகின்றது. இப்பாடல்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய இமானின் வீடியோவும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

இமான் இசையமைத்த பாடல்கள் குறை கூற முடியாதவையாக இருந்தாலும் அவர் திரைப்படத்தின் கதாநாயகியின் அறிமுக காட்சிகளில் இசையமைக்கும் இசை அவ்வளவு ஆழகாகவும், அந்த இசையிலே அந்த திரைப்படத்தின் நாயகிகள் இன்னும் அழகாகவும் தோன்றுவர்.

லேட்டஸ்டாக ரஜினி முருகனின் நாயகி கீர்த்தி சுரேஷை ரசிகர்கள் இன்னும் பார்த்துப் பார்த்துக் கொண்டாடுகிறார்கள்.. காரணம் இமான் போட்ட ட்யூன்!

இந்த படத்தில் வேறு மூன்று கதாநாயகிகள் உள்ளனராம். அப்போ மூன்று விதவிதமான கலகல இசை காற்றோடு விளையாடப்போகின்றது என்று நம்பலாம்.

English summary
Tomorrow Actor Sasikumar's Vetrivel Movie's Audio Launch On Think Music. Which Movie's Music Composer D.Imman Posted one Video About Vetrivel movie's Songs and That Singers, Lyricist And other details.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil