For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Best Actor 2022: இந்த ஆண்டு ரசிகர்களை அதிகம் கவர்ந்த டாப் 10 நடிகர்கள்.. முதலிடத்தில் யார்?

  |

  சென்னை: கடந்த 2 ஆண்டுகளாக சினிமா உலகமே கொரோனா காரணமாக ஏகப்பட்ட லாக்டவுன்களை சந்தித்து வந்தன.

  பல மாதங்கள் தியேட்டர்கள் முடக்கப்பட்டும், 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்கி வரும் சூழலுக்கும் தள்ளப்பட்டன.

  ஆனால், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் எனும் கொடிய நோய் கட்டுப்பாட்டுக்கள் வந்த நிலையில், மீண்டும் பழையபடி வாரத்திற்கு 5 திரைப்படங்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், இந்த ஆண்டு சிறந்த நடிப்பால் ரசிகர்களை அதிகம் கவர்ந்த டாப் 10 தமிழ் சினிமா நடிகர்கள் யார் யார்? என்பதை இங்கே பார்ப்போம்..

  ஏஆர் ரஹ்மான் பங்கேற்ற மெக்சிக்கோ சினிமா விருந்து… கோவா திரைப்பட விழாவில் நடந்த சுவாரஸ்யம் ஏஆர் ரஹ்மான் பங்கேற்ற மெக்சிக்கோ சினிமா விருந்து… கோவா திரைப்பட விழாவில் நடந்த சுவாரஸ்யம்

  10. தனுஷ்

  10. தனுஷ்

  இந்த ஆண்டு நடிகர் தனுஷ் கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என தனது நடிப்பால் அதிரடி காட்டினார். ஓடிடியில் வெளியான மாறன் திரைப்படம் சொதப்பிய நிலையில், பாலிவுட் படமான அட்ரங்கி ரே படமும் ஓடவில்லை. இந்த ஆண்டு அவ்வளவு தானா என நினைத்து இருந்த நிலையில், இயக்குநர் மித்ரன் ஜவஹரின் திருச்சிற்றம்பலம் படம் தனுஷுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. அசுரன் அளவுக்கு நடிப்பை வெளிக்காட்ட ஸ்கோப் கிடைக்கவில்லை என்றாலும், வேலையில்லா பட்டதாரி தனுஷ் போல நடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார் தனுஷ்.

  9. சிம்பு

  9. சிம்பு

  கடந்த ஆண்டு இறுதியில் மாநாடு படத்தின் மூலம் மாஸ் காட்டிய நடிகர் சிம்பு இந்த ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்திற்காக உடல் எடையை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு குறைத்தும், ஏற்றியும் வட்டார வழக்கு பேசியும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அடுத்து பத்து தல படம் சிம்புவுக்கு எப்படி இருக்கும் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்..

  8. விஜய்சேதுபதி

  8. விஜய்சேதுபதி

  லாபம், டிஎஸ்பி உள்ளிட்ட படங்கள் நடிகர் விஜய்சேதுபதிக்கு இந்த ஆண்டு சரியாக அமையவில்லை. ஆனால், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாரா, சமந்தா என இருவரை ஒரே நேரத்தில் காதலிப்பது போல செம காமெடியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும், கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் சந்தனமாக அவர் நடித்த காட்சிகள் வெறித்தனம் என்று தான் சொல்ல வேண்டும்.

  7. சிவகார்த்திகேயன்

  7. சிவகார்த்திகேயன்

  தீபாவளிக்கு வெளியான பிரின்ஸ் திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. ஆனால், அதற்கு முன்னதாக வெளியான டான் திரைப்படம் 100 கோடி வசூல் ஈட்டி நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்தது. பள்ளி, கல்லூரி மாணவனாகவும் இயக்குநராகவும் நடிப்பில் வெரைட்டி காட்டியிருந்தார் டான் சிவகார்த்திகேயன்.

  6. கார்த்தி

  6. கார்த்தி

  நடிகர் கார்த்திக்கு இந்த ஆண்டு சூப்பரான ஆண்டு என்றே சொல்லலாம். முதல் பாதியில் படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில், கடைசியில் ஹாட்ரிக் ஹிட் அடித்து விட்டார். விருமன் படத்தில் கிராமத்து இளைஞனாகவும், பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாகவும், தீபாவளிக்கு வெளியான சர்தார் படத்தில் பல கெட்டப் போட்டு ரகசிய உளவாளியாகவும் நடித்து பட்டையை கிளப்பி உள்ளார் கார்த்தி.

  5. சூர்யா

  5. சூர்யா

  சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்களை கொடுத்து தனது நடிப்பால் ஒட்டுமொத்த உலக ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்திய நடிகர் சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால், கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் கிளைமேக்ஸில் ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சில நிமிடங்களே வந்தாலும், தனது நடிப்பால் அனைவரையுமே தூக்கிச் சாப்பிட்டார்.

  4. சியான் விக்ரம்

  4. சியான் விக்ரம்

  ஓடிடியில் வெளியான மகான் படத்திலேயே தனது மகனுடன் மல்லுக்கட்டி மாஸ் காட்டியிருந்தார் சியான் விக்ரம். கோப்ரா படத்திலும் ஏகப்பட்ட கெட்டப் போட்டு நடித்திருந்தார். ஆனால், அந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாகவே வாழ்ந்திருந்தார் சியான் விக்ரம்.

  3. அஜித்

  3. அஜித்

  கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக அஜித்தின் வலிமை படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்தனர். இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான வலிமை திரைப்படம் விமர்சன ரீதியாக சொதப்பினாலும், அந்த படத்திற்காக நடிகர் அஜித் ரொம்பவே மெனக்கெட்டு நடித்திருந்தார். இளைஞர்கள் தவறான வழிக்கு செல்லக் கூடாது என்கிற விழிப்புணர்வு படத்தை கொடுத்த அஜித், அடுத்து அயோக்கியர்களின் ஆட்டத்தை ஆட துணிவாக வர உள்ளார்.

  2. விஜய்

  2. விஜய்

  இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் இந்த ஆண்டு விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தாலும், நடிகராக தனது ரசிகர்களை ஒரு போதும் விஜய் ஏமாற்றவே இல்லை. விஜயராகவனாக பீஸ்ட் படத்தில் ஆக்‌ஷனில் அதிரடி காட்டியும் அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல்களில் டான்ஸ் ஆடி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஈர்த்ததிலும் விஜய் ஸ்கோர் செய்துள்ளார்.

  நம்பர் ஒன் நாயகன்

  நம்பர் ஒன் நாயகன்

  4 ஆண்டுகளுக்கு பிறகு தனது படம் ரிலீஸ் ஆனாலும், என்னைக்கும் நான் ராஜா என்பதை நிரூபித்து விட்டார் கமல்ஹாசன். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் கோஸ்ட்டாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தியேட்டரை நோக்கி வர வைத்த நாயகன் கமல்ஹாசன் இந்த ஆண்டு இந்த பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். இதில், உங்கள் மனம் கவர்ந்த டாப் 10 நடிகர்கள் பட்டியலை கமெண்ட் செய்யவும்.

  English summary
  Best Actors 2022 Top 10 list is here, From Kamal Haasan to Sivakarthikeyan many talented actors and fans favorite actors spotted in the list. Please check out the list, and feed your comments.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X