2021ல் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வெற்றி பெற்ற தமிழ் படங்கள்!
சென்னை : வழக்கம் போலவே கடந்த 2021ஆம் ஆண்டும் தமிழில் பல குறைந்த பட்ஜெட்டில் திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.
பெரிய நடிகர்கள் எதுவும் இல்லாமல் சிறிய நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் 2021இல் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வெற்றி பெற்ற மிகச் சிறந்த 3 திரைப்படங்களை இங்கு நாம் காண்போம்.

ஜாங்கோ
குறைந்த பட்ஜெட்டில் படங்களை தயாரித்து அதை வெற்றி படங்களாக கொடுப்பதையே ஃபார்முலாவாக வைத்துள்ள தயாரிப்பாளர் சிவி குமார் தயாரிப்பில் முற்றிலும் வித்தியாசமான கதை களத்தில் வெளியான திரைப்படம் ஜாங்கோ. இயக்குனர் கார்த்திகேயன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் பெரும்பாலும் புதுமுக நடிகர்களை வைத்து உருவானது. தமிழில் ஹாலிவுட் தரத்தில் டைம் லூப் பாணியில் உருவான இந்த திரைப்படம் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ஹாலிவுட் தரத்தில் தயாரிக்கப்பட்டது. 2021 தமிழ் சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மிகச்சிறந்த படமாக ஜாங்கோ உள்ளது

லிப்ட்
சின்னத்திரையில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி நடிகர்களின் இப்பொழுது வெள்ளித்திரையிலும் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடித்த முதல் திரைப்படம் லிப்ட் இயக்குனர் வினித் வரபிரசாத் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் மிகக்குறைந்த நடிகர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டார்கள். ஒரே ஒரு அலுவலகம் மற்றும் அந்த அலுவலகத்தில் உள்ள லிப்ட் இவைகளை மட்டுமே வைத்துக்கொண்டு மிகச்சிறந்த ஹாரர் திரைப்படத்தை இயக்குனர் வினித் வரபிரசாத் கொடுத்துள்ளார். கவின் மற்றும் அமிர்தா ஐயர் இப்படத்தில் லீட் ரோலில் மிகச் சிறப்பாக நடித்திருப்பார்கள். 2021 இல் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மிகச் சிறந்த திரைப்படமாக லிப்ட் உள்ளது

விநோதய சித்தம்
இயக்குனர்,நடிகர் என பல அவதாரங்கள் எடுத்து தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பிராமையா லீட் ரோலில் நடித்த திரைப்படம் விநோதய சித்தம்.
Recommended Video

புது விதமான
ஒரே ஒரு குடும்பம் அதில் மிகக் குறைந்த நடிகர் நடிகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத புதுவிதமான கதையை சமுத்திரக்கனி இயக்கி பாராட்டுக்களை பெற்றுள்ளார். நேரடியாக ஓடிடியில் வெளியான விநோதய சித்தம் 2021ல் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மிகச் சிறந்த திரைப்படமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











