யப்பா...செம லுக்கா இருக்கு...செல்ஃபியுடன் சர்தார் அப்டேட் வெளியிட்ட ஹீரோயின்
சென்னை : கார்த்தி நடித்து வரும் சர்தார் படத்தின் ஹீரோயின் யார் என்பதை சஸ்பென்சாக வைத்திருந்தார்கள். ஆனால் இன்று தான் தான் சர்தார் படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடிக்க போவதை செல்ஃபியுடன் அந்த நடிகையே அப்டேட் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் கார்த்தி. தனது முதல் படமான பருத்திவீரன் படத்தில் இருந்தே தனது யதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து வருகிறார் கார்த்தி. ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், கைதி என வரிசையாக ஹிட் கொடுத்து வருகிறார் கார்த்தி.

வரிசையாக காத்திருக்கும் படங்கள்
தற்போது டைரக்டர் மணிரத்னம் இயக்கும் வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் படத்தில் வந்திய தேவன் கேரக்டரில் நடித்து முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து முத்தையா இயக்கும் கிராமத்து பொழுதுபோக்கு படமான விருமன், ஸ்பை த்ரில்லர் படமான சர்தார் என வரிசையாக கார்த்தி படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

மீண்டும் துவங்கிய ஷுட்டிங்
கொரோனா, கார்த்தியின் பொன்னியின் செல்வன் ஷுட்டிங் உள்ளிட்ட பல காரணங்களால் கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த சர்தார் படத்தின் ஷுட்டிங் தற்போது மீண்டும் சென்னையில் துவங்கப்பட்டுள்ளது. சிறத்தை படத்திற்கு பிறகு மீண்டும் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் இது. அதுவும், இளமையான ஹீரோ மற்றம் வயதானவர் இரு மாறுபட்ட கேரக்டர்களில் கார்த்தி முதல் முறையாக நடிக்க உள்ளார்.

அப்டேட் வெளியிட்ட ஹீரோயின்
சர்தார் படத்தில் சிம்ரன், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது சென்னையில் துவங்கப்பட்டுள்ள ஷுட்டிங்கில் கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர். ஆனால் இந்த படத்தின் ஹீரோயின் யார் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் டாப் ஹீரோயின் ஒருவர், தான் சர்தார் படத்தில் நடிப்பதாக அப்டேட் வெளியிட்டுள்ளார்.

இவர் தான் ஹீரோயினா
அந்த நடிகை வேறு யாருமில்லை, ராஷி கன்னா தான். ஷுட்டிங் ஸ்பாட்டில் செம அழகான லுக்கில் இருக்கும் செல்ஃபியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராஷி கன்னா, And another journey begins...sardar. P.S.Hello Chennai என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். சர்தார் படத்தில் இவரும் இணைய போவதாக கூறியதும் ரசிகர்கள், நிஜமாகவா என ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர். அதோடு ராஷியின் செம அழகான போட்டோவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











