Just In
- 22 min ago
பிக்பாஸ் கொண்டாடட்டத்தில் மீண்டும் இணைந்த ட்ரியோ.. தீயாய் பரவும் போட்டோஸ்!
- 40 min ago
ஷிவானி எங்கே காணோம்.. ஜோடி ஜோடியா நிற்கும் பிக் பாஸ் பிரபலங்கள்.. வைரலாகும் கொண்டாட்ட போட்டோ!
- 1 hr ago
காமெடி நடிகருடன் ஜோடி சேரும் சாய் பல்லவி!
- 1 hr ago
அஜித் மட்டும்தான் மிஸ்சிங்.. செம க்யூட்டாக இருக்கும் ஆத்விக்.. டிரெண்டாகும் ஹாஷ்டேக் #KuttyThala
Don't Miss!
- News
அதிமுகவை மீட்போம்... அம்மா ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவோம்... இப்பவே ஆரம்பித்த டிடிவி தினகரன்
- Lifestyle
வயதானவர்கள் அதிகமா டீ குடிக்கணும் என்பதற்கான அறிவியல் காரணங்கள் என்னென்ன தெரியுமா?
- Sports
ரோகித் சர்மா, ரஹானே, தாக்கூர் எல்லாம் சென்னை வந்துட்டாங்க... களைகட்டப்போகும் போட்டிகள்!
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை!
- Finance
சூப்பர் சரிவில் தங்கம் விலை.. 5வது நாளாக சரிவு.. இன்னும் குறையுமா? நிபுணர்கள் கணிப்பு என்ன?
- Automobiles
இந்தியாவில் புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2020ல் தியேட்டரில் வெளியாகி வெற்றியடைந்த படம் எது? தர்பார் முதல் சைக்கோ வரை.. டாப் 7 லிஸ்ட் இதோ!
சென்னை: 2020ம் ஆண்டு தியேட்டரில் வெளியான படங்களே மிகவும் குறைந்த எண்ணிக்கை தான்.
மார்ச் மாதத்தின் மையப் பகுதியிலே கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் நாடு முழுவதும் போடப்பட்டது.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராஜா வீட்டு கண்ணுக்குட்டி.. 2வது நபர் இவரா? தீயாய் பரவும் தகவல்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான தர்பார், பட்டாஸ், பிப்ரவரி மாதத்தில் வெளியான ஓ மை கடவுளே, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், சைக்கோ உள்ளிட்ட படங்கள் தான் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. எந்த படத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது என்பதை இங்கே காண்போ

7. இரண்டாம் குத்து
கொரோனா கலவரத்துக்கு பின்னர், தியேட்டர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திறக்கப்பட்ட நிலையில், தியேட்டர்களில் தீபாவளி கொண்டாட்டமாக வெளியான இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் 2ம் பாகமான இரண்டாம் குத்து இந்த பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளது. ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து, கஜினிகாந்த் படங்களை இயக்கிய இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இந்த படத்தில் நாயகனாக அறிமுகமாகி உள்ளார்.

6. மாஃபியா
லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் மற்றும் வில்லனாக பிரசன்னா மிரட்டிய மாஃபியா படம் இந்த ஆண்டு தியேட்டரில் வெளியாகும் வாய்ப்பை பெற்றது. துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் கார்த்திக் நரேன் இந்த படத்தில் சற்றே சறுக்கினாலும், ஒரு வித்தியாசமான அட்டெம்ப்ட்டை இந்த படத்தில் பண்ணியிருந்தார்.

5. சைக்கோ
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ், இயக்குநர் ராம் நடிப்பில் வித்தியாசமான கதையம்சம் கொண்டு சைக்கோ த்ரில்லர் படமாக சைக்கோ படம் இந்த ஆண்டு வெளியானது. இசைஞானி இளையராஜா இசையில் பாடல்களும், கண் தெரியாத ஹீரோ எப்படி தனது காதலியை சைக்கோவிடம் இருந்து காப்பாற்றுகிறான் என்கிற கதையை கச்சிதமாக படமாக்கி இருந்தார் மிஷ்கின். வித்தியாசமான உதயநிதியை ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.

4. பட்டாஸ்
பொங்கல் விருந்தாக இந்த ஆண்டு வெளியான தனுஷின் பட்டாஸ் படம் இந்த ஆண்டு டாப் 4 இடத்தை பிடித்துள்ளது. எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களை இயக்கிய இயக்குநர் துரை செந்தில்குமார், அடிமுறை கலையை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கி இருந்தார். சினேகாவின் நடிப்பு பாராட்டுக்களை அள்ளியது.

3. தர்பார்
இந்த ஆண்டு ஆரம்பமே மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு நடிப்பில் வெளியான படம் தர்பார். ஆனால், ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் உள்ளதாக கடுமையாக விமர்சிக்கப்பட்ட இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

2. ஓ மை கடவுளே
அறிமுக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் காதலர் தினத்தன்று ரிலீசான திரைப்படம் ஓ மை கடவுளே. ஃபேண்டஸி பிளஸ் ரொமான்ஸ் படமான வெளியான இந்த படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், ஷாரா மற்றும் கடவுளாக விஜய்சேதுபதி நடித்து இருந்தார். மேஜிக்கல் டிக்கெட்டை வைத்துக் கொண்டு உண்மையான காதலை அசோக் செல்வன் புரிந்து கொள்ளும் விதமாக எடுக்கப்பட்ட இந்த படம் மக்களின் பாராட்டுக்களை அள்ளியது.

1. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
பக்காவா பிளான் போட்டு கொள்ளையடித்தால் மாட்டிக் கொள்ள மாட்டோம் என இந்த உலகில் நிதர்சனமாக நடக்கும் உண்மையை செம என் டர்டெயின் மென் ட்டோடு இந்த ஆண்டு சொல்லி, ஏகப்பட்ட உள்ளங்களை கொள்ளையடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் தான் இந்த ஆண்டு தியேட்டரில் வெளியான மிகச் சிறந்த படம். இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரிது வர்மா மற்றும் கெளதம் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்பெற்றது.