For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  முதல் ரவுண்டில் ப்ளாக் பஸ்டர் கொடுத்த டாப் ஹீரோஸ்: இரண்டாவது ரவுண்ட்ல சக்சஸ் பண்ண முடிஞ்சுதா?

  |

  சென்னை: கடந்த இரு வருடங்களாக தென்னிந்தியத் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்புகள் காணப்படுகின்றன.

  திரையரங்குகளில் வெளியான சில திரைப்படங்கள் மட்டுமே மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளன.

  அதேபோல், முதல் ரவுண்டில் சூப்பர் ஹிட் கொடுத்த நயாகர்கள் இரண்டாவது ரவுண்டில் தடுமாறி வருகின்றனர்.

  இலங்கையில் 90 சதவீதம் பேர் விஜய் ரசிகர்கள் தானாம்.. மாஸ்டர் படத்தோட வசனம் தான் ஞாபகத்துக்கு வருது! இலங்கையில் 90 சதவீதம் பேர் விஜய் ரசிகர்கள் தானாம்.. மாஸ்டர் படத்தோட வசனம் தான் ஞாபகத்துக்கு வருது!

  மாஸ்டரில் ஹிட் கொடுத்த விஜய்

  மாஸ்டரில் ஹிட் கொடுத்த விஜய்

  கொரோனா முதல் லாக்டவுனுக்குப் பின்னர் வெளியான திரைப்படங்களில், விஜய்யின் ‘மாஸ்டர்' பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற போதிலும், 2021 பொங்கலில் வெளியான ‘மாஸ்டர்', 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தது.

  பீஸ்ட் படத்தில் தடுமாற்றம்

  பீஸ்ட் படத்தில் தடுமாற்றம்

  அதனைத் தொடர்ந்து விஜய் நடித்த ‘பீஸ்ட்' படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை ஹிட் கொடுத்ததால், இயக்குநர் நெல்சனை நம்பி களத்தில் இறங்கினார் விஜய். ஆனால், நடந்ததோ வேறு. விஜய்க்கு மாஸ் ஹீரோயிசம் தருகிறேன் என்ற பெயரில், பயங்கரமாக மொக்கை வாங்கினார் நெல்சன். ஆக முதல் ரவுண்டில் மாஸ் காட்டிய விஜய், பீஸ்ட்டில் தடுமாறி கரை சேர்ந்தார்.

  ரஜினி, அஜித் படங்களும் ஏமாற்றம்

  ரஜினி, அஜித் படங்களும் ஏமாற்றம்

  அதேபோல், நீண்ட நாட்களாக ஹிட் கொடுக்க காத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி, அஜித் இருவரும் தொடர்ந்து ஏமாற்றங்களையே சந்தித்து வருகின்றனர். ரஜினியின் ‘அண்ணாத்த', அஜித்தின் ‘வலிமை' படங்களில், ரஜினியும் அஜித்தும் தங்களது வேலையை சரியாக செய்திருந்தாலும், இயக்குநர்கள் அதீத நம்பிக்கையில் கப்பல் தரைத்தட்டி நின்றது. முன்னதாக விஜய்யின் பீஸ்ட் படத்திலும் இதுவே நடந்தது. ரஜினி, விஜய், அஜித் ஆகியோரால், முதலுக்கு மோசமில்லாமல் வசூலிலும் 100 கோடிகளை குவித்தது.

  அல்லு அர்ஜுன் அடித்த மெகா சிக்ஸ்ர்

  அல்லு அர்ஜுன் அடித்த மெகா சிக்ஸ்ர்

  2021 இறுதியில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா' திரைப்படம், இந்திய அளவில் மெகா சிக்ஸர் அடித்தது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் ஃபாசில், ராஷ்மிகா உள்ளிட்ட பலர் நடிக்க, தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை படத்தின் வெற்றிக்கு மாஸ் கூட்டியது. அடுத்த வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு இப்போது எதிர்பார்ப்புகள் தாறுமாறாக உள்ளன. அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசிலுடன், விஜய் சேதுபதி, ப்ரியாமணி ஆகியோரும் இணைவார்கள் என சொல்லப்படுகிறது. இந்தப் படம் வெற்றி பெறுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர்

  ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர்

  அதேபோல், மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்' கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் குறை வைக்கவில்லை. ஆனால், அதில் நடித்திருந்த ராம் சரணின் அடுத்தப் படமான ‘ஆச்சார்யா' ப்ளாப் ஆனது. குறிப்பாக இந்தப் படத்தில் ராம்சரணின் தந்தையும், டோலிவுட் மெகா ஸ்டாருமான சிரஞ்சீவி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் படம் என்னவாகப் போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

  பவன் கல்யாணின் பீம்லா நாயக்

  பவன் கல்யாணின் பீம்லா நாயக்

  மலையாளத்தில் மெகா ஹிட் கொடுத்த ‘அய்யப்பனும் கோஷியும்' படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தனர். ‘பீம்லா நாயக்' என்ற டைட்டிலில், டோலிவுட் சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண், ராணா ஆகியோர் நடித்த இந்தப் படமும், பெரிய ப்ளாப் என சொல்லப்படுகிறது. அதேபோல் நாக சைத்தன்யா நடிப்பில் வெளியான ‘Thank You' படமும், தோல்வியடைந்தது. கன்னடத்தில் யாஷ், பிரசாந்த் நீல் கூட்டணியில் வெளியான ‘கேஜிஎஃப் 2' படம் மட்டுமே, முதல் பாகம் போன்று ஹிட் அடித்தது.

  Recommended Video

  Sibiraj | Pushpa படம் உங்கனால தான் பார்த்தேன் | Sibiraj Funny Speech | Vattam Press Meet | *Launch
  விக்ரம் படத்தின் வெற்றிக்கு காரணம்

  விக்ரம் படத்தின் வெற்றிக்கு காரணம்

  தமிழில் அடுத்தடுத்து தோல்விப் படங்களே வெளியாகிக் கொண்டிருக்க, கமலின் ‘விக்ரம்' படம் மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. வசூல், ரசிகர்களின் வரவேற்பு என அதகளம் செய்தது. படத்தில் கமல் எந்த தலையீடும் செய்யாமல், முழுமையாக லோகேஷ் கனகராஜ்ஜை நம்பியதே காரணம் என சொல்லப்பட்டது. அதேபோல், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், சூர்யா என மல்டி ஸ்டார் படமாக விக்ரம் உருவானது. இனி அடுத்து கமல் நடிப்பில் வெளியாகும் படம் மூலமாகவே, அவரின் சக்சஸ் ஃபார்முலா தெரியவரும் என எதிர்பார்க்கபடுகிறது.

  English summary
  Along with big hits, South continues to deliver big flops: With RRR, KGF: Chapter 2 and Vikram, the South registered its dominance in Indian cinema. However, the four film industries continue to deliver big flops as much as the big hits. ( தென்னிந்தியத் திரைப்படங்களான ஆர்.ஆர்.ஆர்., கேஜிஎஃப் 2, விக்ரம் போன்ற படங்கள் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தாலும், மற்ற திரைப்படங்கள் மிகப் பெரிய தேல்வியைத் தழுவியுள்ளன )
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X