twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாக்யராஜை பார்த்தா மியூசிக் போட வருமா? - இளையராஜா

    |

    Tough to compose music for villans : Ilayaraja
    சென்னை: 'வில்லன் நடிகர்களுக்கு பாடல் போடவே வராது' என இளையராஜா தெரிவித்துள்ளார்.

    நேற்று சென்னையில் ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் இளையராஜா இசையமைக்கும் 'சித்திரையில் நிலாச் சோறு' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் சிவகுமார், சத்யராஜ், இளையராஜா, ஆர். சுந்தர்ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் இளையராஜா பேசினார். அப்பொழுது அவர் வில்லன்கள் முகத்தைப் பார்த்தால் இசை அமைக்கவே வராது என்றார்.

    இறைவனுக்கு நன்றி...

    பொதுவா இந்த அரங்கத்துலயே நடந்த நான் இசையமைத்த படங்களுக்கு நான் வந்ததில்லை, இந்த படத்திற்கு வரவேண்டிய சூழ்நிலையை இறைவன் ஏற்படுத்தி விட்டான். உங்களையெல்லாம் சந்திக்கக் கூடிய பாக்கியம் கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி.

    இசையை கேட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்...

    நான் இசையமைக்கிற படத்தை பத்தி பொதுவா சொல்றதில்லை. இந்த படத்துல இதை பண்ணியிருக்கேன், அதை பண்ணியிருக்கேன்னு பேசறது தேவையில்லாதது. ஏன்னா, இசையை கேட்டால் நீங்களே முடிவு பண்ணிடப் போறீங்க.

    வில்லனுக்கு பாட்டு.. ரொம்பக் கஷ்டம்

    சில வில்லன் நடிகர்களுக்கு பாடல் போடறதுக்கு வரவே வராது. பல நடிகர்களை நீங்க யோசிச்சி பாருங்க. அவங்க பாட்டு பாடினால், அவங்களுக்கு கம்போஸ் பண்றப்ப என்னோட மன நிலை பாட்டுக்கு போகணும் இல்லையா.

    வில்லன் ஹீரோ ஆனால்...

    ஆனால், இதையெல்லாம் மீறி சத்யராஜ் வில்லனா இருக்கிறப்ப 'என்னம்மா கண்ணு...செளக்கியமான்னு ஆரம்பமாச்சி...அப்புறம் அவர் ஹீரோவானதுக்கப்புறம் 'தாஸ் தாஸ்...சின்னப்ப தாஸ்னு' டூயட் போடறதுக்கு வசதியா இருந்துச்சி.

    ரொம்பக் கஷ்டம்...

    இப்படித்தான் பாரதிராஜா 'புதிய வார்ப்புகள்' படம் எடுக்கும் போது பாக்யராஜ்தான் ஹீரோன்னு முடிவு பண்ணாரு. என்னய்யா நாங்கள்லாம் மியூசிக்லாம் போட வேண்டாமா, முகத்தைப் பார்த்தால் மியூசிக் போடணும்னு தோணுமான்னு ஓபனா கேக்கறன்.

    ரொம்ப தப்புனு புரிஞ்சது...

    அதுல என்ன தவறுன்னா, பின்னாடி நான் உணர்ந்தது. இவர் அற்புதமான திரைக்கதை அமைப்பவர். இந்தியாவுலயே பேர் வாங்கினவரு. ஒரு கலைஞனை முழுமையாகப் புரிந்து கொள்ளக் கூடிய நேரத்துலதான் அந்த பாராட்டுக்கு அர்த்தம் வருது.

    பாரதிராஜா செஞ்சது சரி...

    புதிய வார்ப்புகள் படத்துல பாரதிராஜா, பாக்யராஜை ஹீரோவா செலக்ட் பண்ணது அந்த படத்துக்கு பெரிய வெற்றியா அமைஞ்சது. பாக்யராஜுக்கும் பெரிய எதிர்காலம் அமைஞ்சது. அது மட்டுமல்ல, பாக்யராஜ் சிறந்த திரைக்கதை ஆசிரியரா இருந்ததாலதான், அவருடைய வாழ்க்கைக்கு, வெற்றிக்கு திரையுலக பயணத்துக்கு மிகப் பெரிய விஷயமா அமைஞ்சதுன்னு உங்க எல்லாருககும் தெரியும்.

    பாடம் கற்றேன்...

    அந்த நேரத்துல அப்ப நான் பாக்யராஜை நம்பலை. படத்தைப் பார்த்த பிறகுதான் பாக்யராஜைப் பத்தி தெரிஞ்சுது, அடடா, பெரிய தப்பு பண்ணிட்டோமே, யார் கிட்டட என்ன திறமை இருக்குன்னு தெரியாம நாம எதுவும் சொல்லக் கூடாதுன்னு முடிவெடுத்தேன். அன்றிலிருந்து யாரைப் பற்றியும் எந்த முடிவும் எடுப்பதில்லைன்னு ஒரு பெரிய பாடத்தை பாக்யராஜிடமிருந்து கற்றுக் கொண்டேன்," என பேசினார்.

    English summary
    Music director Ilayaraja says that it is very tough to compose music to villans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X