»   »  'டிராபிக்' மலையாளப் பட இயக்குநர் ராஜேஷ் பிள்ளை மரணம்

'டிராபிக்' மலையாளப் பட இயக்குநர் ராஜேஷ் பிள்ளை மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டிராபிக் என்ற புகழ்பெற்ற மலையாளப் படத்தை இயக்கிய ராஜேஷ் பிள்ளை கொச்சியில் இன்று காலமானார். அவருக்கு வயது 42.

இவர் இயக்கிய வேட்ட (Vettah) என்கிற மலையாளப் படம் சமீபத்தில்தான் வெளியாகியது. வேட்ட படப்பிடிப்பின்போதே அவருக்குப் பலமுறை உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

Traffic director Rajesh Pillai died at Kochi

இந்நிலையில் கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.

2011-ல் வெளிவந்த டிராபிக் படம் மூலம் புகழ்பெற்றவர் ராஜேஷ் பிள்ளை. இந்தப் படம் தமிழில், சென்னையில் ஒருநாள் என்று ரீமேக் ஆனது. மலையாளத் திரையுலகின் ஒரு பெரிய திருப்புமுனையாக டிராபிக் படம் மதிப்பிடப்படுகிறது. இதனால் ராஜேஷின் மரணம், மலையாளத் திரையுலகை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

ராஜேஷ், 5 படங்களை இயக்கியுள்ளார். ராஜேஷ் பிள்ளையின் மரணத்துக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

English summary
Traffic Malayalam filmmaker Rajesh Pillai was passed away due to poor health.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos