»   »  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இளையராஜா குரலில் அஞ்சலி செலுத்திய வர்ஷன்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இளையராஜா குரலில் அஞ்சலி செலுத்திய வர்ஷன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் பாடல் என்ற பெயரில் ஒரு பாடல் வலையுலகில் உலா வருகிறது.

நிறையப் பேர் இந்தப் பாடலைப் பாடியவர் இளையராஜா என்றுதான் நினைத்துவிட்டார்கள். அப்படியே செய்தி பரப்பியும் வந்தனர்.

Tribute to Amma in Ilaiyaraaja voice

ஆனால் இப்போதுதான் அந்தப் பாடலைப் பாடியவர் யார், இசையமைத்தது யார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

'அம்மா...' எனத் தொடங்கும் அந்தப் பாடலை இசையமைத்துப் பாடியிருப்பவர் வர்ஷன். இவர் ஒரு வளரும் இசைக் கலைஞர். எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய 'புறம்போக்கு' படத்திற்கு இசையமைத்தவர். பாடலை எழுதியிருப்பவர் வளரும் பாடலாசிரியர் அஸ்மின். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சமர்ப்பணம் செய்து தமிழ் சினிமா கலைஞர்களால் வெளியிடப்படும் முதல் இரங்கல் பாடல் இது.

இந்த பாடல் பாடிய வர்ஷனின் குரல், அச்சு அசல் இளையராஜா குரல் போல் இருப்பதால் இளையராஜா தான் இந்த பாடலை எழுதி, பாடி வெளியிட்டுள்ளார் என்று கூற ஆரம்பித்துவிட்டனர்.

English summary
Varshan, an upcoming music director has composed a song and rendered in Ilaiyaraaja voice for Late CM Jayalalithaa become viral in social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil