»   »  'மோகினி'க்காக தலைகீழாக தொங்கும் த்ரிஷா

'மோகினி'க்காக தலைகீழாக தொங்கும் த்ரிஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மோகினி படத்தில் வரும் சண்டைக் காட்சிக்காக த்ரிஷா கயிறை பிடித்துக் கொண்டு தலை கீழாக தொங்கி பயிற்சி எடுத்து வருகிறார்.

மாதேஷ் இயக்கத்தில் மோகினி என்ற படத்தில் நடித்து வருகிறார் த்ரிஷா. படத்தில் வரும் த்ரிஷாவின் கதாபாத்திரத்தின் பெயர் தான் மோகினி. நீங்கள் யோசித்தது சரியே. மோகினி ஹீரோயின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டும் படம் தான்.

இந்த காரணத்தாலும் த்ரிஷா குஷியாக உள்ளார்.

சமையல் கலைஞர்

சமையல் கலைஞர்

அம்மா சமைத்த பிரியாணி என்றால் டயட்டை மறந்துவிட்டு மூக்கு முட்ட சாப்பிடும் த்ரிஷா மோகினியில் சமையல் கலைஞராக நடிக்கிறார். அவர் சமையல் கலைஞர் உடையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

லண்டன்

லண்டன்

மோகினி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. மோகினியில் இந்தி நடிகர் ஜாக்கி பாக்னானி நடிக்கிறார். லண்டனில் படப்பிடிப்பை முடித்த படக்குழு சென்னை திரும்பியுள்ளது.

சண்டை காட்சி

சண்டை காட்சி

படத்தில் த்ரிஷா வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சிகள் உள்ளது. அதிலும் ஒரு காட்சியில் கயிறை பிடித்துக் கொண்டு தொங்கியபடி எல்லாம் சண்டை போட வேண்டுமாம்.

டூப் வோண்டாம்

டூப் வோண்டாம்

சண்டை காட்சியில் நானே தான் நடிப்பேன். டூப் எல்லாம் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார் த்ரிஷா. இதையடுத்து கயிறை பிடித்துக் கொண்டு தலை கீழாக தொங்கி பயிற்சி எடுத்து வருகிறார். இந்த காட்சியை படமாக்க பாங்காக்கில் இருந்து சண்டை கலைஞர்கள் வரவழைக்கப்படுகிறார்கள்.

English summary
Trisha will perform stunts by hanging from rope for her upcoming movie Mohini being directed by Madhesh.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos