ஐஸ்வர்யா ராய் கூட சிரிச்சே பேசக் கூடாதுன்னு மணி சார் திட்டுவாரு.. ஓப்பனா பேசிய த்ரிஷா!

சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

அந்த படத்தை பெரிதளவில் புரமோட் செய்ய கேரளாவிற்கு தற்போது படக்குழுவினர் படையெடுத்துள்ளனர்.

சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பெருமை

தமிழ் சினிமாவின் பெருமை

டோலிவுட்டுக்கு இந்த ஆண்டு ஆர்ஆர்ஆர், சாண்டில்வுட்டுக்கு கேஜிஎஃப் 2, பாலிவுட்டுக்கு பிரம்மாஸ்திரா என மெகா பட்ஜெட் படங்கள் ரிலீஸானதை போல தமிழ் சினிமாவின் பெருமையாக இம்மாத இறுதியில் பொன்னியின் செல்வன் படம் வெளியாக போகிறது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இந்த படத்தில் குந்தவையாக த்ரிஷா நடித்துள்ளார்.

த்ரிஷா புரமோஷன்

த்ரிஷா புரமோஷன்

பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷனுக்காக இயக்குநர் மணிரத்னத்துடன் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி அனைத்து இடங்களுக்கும் செல்ல உள்ள நிலையில், அவர்களுடன் நடிகை த்ரிஷா புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சோபிதா துலிபாலா உள்ளிட்டோர் புரமோஷன்களில் கலந்து கொள்ளவில்லை.

குந்தவை கதாபாத்திரத்தில்

குந்தவை கதாபாத்திரத்தில்

அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலில் குந்தவை கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய முக்கியத்துவம் உள்ளது. ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மனின் சகோதரியான அவர் வந்தியத்தேவன் உடன் காதல் கொள்வார். அந்த கதாபாத்திரத்தில் தான் நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராயுடன் நடித்த அனுபவம்

ஐஸ்வர்யா ராயுடன் நடித்த அனுபவம்

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை த்ரிஷா பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் இணைந்து நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். நந்தினி மற்றும் குந்தவை கதாபாத்திரங்களுக்கு நடுவே ஒரு மோதல் எப்போதுமே பனிப்போராகவே நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி நடித்தார்கள் என்பதை பகிர்ந்துள்ளார். ஐஸ்வர்யா ராய் உள்ளேயும் வெளியேவும் அழகானவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மணி சார் திட்டுவாரு

மணி சார் திட்டுவாரு

மேலும், ஐஸ்வர்யா ராய் கூட நான் ரொம்பவே ஜாலியா அரட்டை அடித்து பேசிட்டு இருப்பேன். மணி சார் எங்களை ஒண்ணா பார்த்துட்டா போதும், திட்ட ஆரம்பிச்சிடுவாரு, நந்தினியும் குந்தவையும் இப்படி ஜாலியா சகஜமாக உட்கார்ந்து பேசக் கூடாது. இரண்டு பேரும் எதிரிங்கன்னு அந்த கதாபாத்திரங்களாகவே செட்டில் இருக்கச் சொல்வார் என படு ஜாலியாக பேசி உள்ளார் த்ரிஷா.

2 மணிக்கு எந்திரிச்சிடுவாங்க

2 மணிக்கு எந்திரிச்சிடுவாங்க

ஐஸ்வர்யா ராய் ரொம்பவே சின்சியர். சில நேரங்களில் அதிகாலை காட்சி என்றால் 2 மணிக்கெல்லாம் எழுந்து முதல் ஆளாக ரெடியாகி ஸ்பாட்டுக்கு வந்துடுவாங்க, நந்தினி கதாபாத்திரத்தை அவங்களை தவிர வேற யாராலும் இவ்வளவு சிறப்பா செய்ய முடியுமான்னு தெரியல, அவங்க ரொம்பவே சின்சியர் என பேசியுள்ளார் த்ரிஷா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X