»   »  வரலாற்றுப் படமாக உருவாகும் நாயகி...2 வேடங்களில் கலக்கும் த்ரிஷா

வரலாற்றுப் படமாக உருவாகும் நாயகி...2 வேடங்களில் கலக்கும் த்ரிஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வரலாற்றுப் படமாக உருவாகி வரும் நாயகி திரைப்படத்தில் த்ரிஷா முதல்முறையாக 2 வேடங்களில் நடித்து வருகிறார். 50 படங்களில் நடித்திருந்தாலும் இதுவரை இரட்டை வேடங்களில் த்ரிஷா நடித்தது இல்லை.

தற்போது முதன்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் நாயகி திரைப்படத்தில் 2 வேடங்களில் நடித்து வருகிறார் த்ரிஷா.

தூங்காவனம் மற்றும் அரண்மனை 2 திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது நாயகி படத்தில் நடித்து வருகிறார் த்ரிஷா.

த்ரிஷா

த்ரிஷா

தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளிலும் நடித்துவரும் த்ரிஷா சமீபத்தில் 50 படங்களில் நடித்து சாதனை செய்தார். தூங்காவனம் மற்றும் அரண்மனை 2 படங்களில் நடித்து முடித்திருக்கும் த்ரிஷா தற்போது நாயகி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நாயகி

நாயகி

தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளிலும் உருவாகி வரும் நாயகி திரைப்படத்தில் த்ரிஷா முதன்முறையாக 2 வேடங்களில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் திரிஷாவிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. 1980 களில் நடப்பது போன்று இத்திரைப்படத்தின் திரைக்கதையை அமைத்து இயக்கி வருகிறார் இயக்குநர் கோவி கோவர்த்தன். திகில் கலந்த காமெடித் திரைப்படமாக நாயகி உருவாகி வருகிறது.

கணேஷ் வெங்கட்ராமன்

கணேஷ் வெங்கட்ராமன்

நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் நாயகியில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடன் இணைந்து ஜெயபிரகாஷ், பிரம்மானந்தம், ஆர்யா ராஜேஷ் ஆகியோர் படத்தில் நடித்து வருகின்றனர்.

5 நிமிடத்தில்

5 நிமிடத்தில்

நாயகி படத்தின் கதையை த்ரிஷாவிடம் கூறியபோது முதல் 5 நிமிடங்களிலேயே இப்படத்தில் நான் நடிக்கிறேன் என்று த்ரிஷா ஒப்புக் கொண்டாராம். இந்தத் தகவலை படத்தின் இயக்குநர் கோவி கோவர்த்தன் தற்போது வெளியிட்டிருக்கிறார்.

த்ரிஷாவின் மேனேஜர்

த்ரிஷாவின் மேனேஜர்

நாயகி படத்தை த்ரிஷாவிடம் 20 ஆண்டுகள் மேனேஜராக இருந்த கிரிதர் தயாரித்து வருகிறார். இந்த வருடத்தின் இறுதியில் நாயகி திரையைத் தொடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Trisha who recently wrapped up the shoot of Kamal's Thoongavanam, will be acting in a Telugu-Tamil bilingual horror-comedy Nayaki. The film directed by Govi is set in 1980's. Trisha, who has been in the film industry for more than a decade, for the first time does a double role in the film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil