»   »  1000 விலங்குகளுக்கு அன்னதானம் வழங்கும் 'விலங்குப் பிரியை' திரிஷாவின் வருண் மணியன்!

1000 விலங்குகளுக்கு அன்னதானம் வழங்கும் 'விலங்குப் பிரியை' திரிஷாவின் வருண் மணியன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்த பரிசாக தொழில் அதிபர் வருண் மணியன் ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளிக்க உள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் 1000 விலங்குகளுக்கு உணவளிக்க உள்ளாராம்.

திரிஷா ஒரு விலங்குகள் பிரியை என்பதால் இந்த நூதன பரிசைத் தருகிறாராம் வருண்.

நடிகை த்ரிஷாவுக்கும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் வருண் மணியனுக்கும் வரும் 23ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. த்ரிஷா திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் த்ரிஷாவுக்கு வருண் மணியன் நிச்சயதார்த்த பரிசாக ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளிக்க உள்ளார் என்று கூறப்பட்டது.

கார் தரலீங்கோ

கார் தரலீங்கோ

த்ரிஷாவுக்கு காரை பரிசாக அளிக்கவில்லை என்று வருண் மணியன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நான் த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் அன்று என்ன பரிசு கொடுக்கப் போகிறேன் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா.

ஆயிரம் விலங்குகளுக்கு உணவு

ஆயிரம் விலங்குகளுக்கு உணவு

எங்கள் நிச்சயம் நடக்கும் வார இறுதிநாட்களில் ஆயிரம் விலங்குகளுக்கு உணவு அளிக்கிறோம், மேலும் ஆண்டு முழுவதும் விலங்குகளுக்கு இருப்பிடம், சிகிச்சை அளிக்க உள்ளோம். ரோல்ஸ் ராய்ஸ் காரை விட த்ரிஷா இதை தான் பொக்கிஷமாக நினைப்பார். கார் வெறும் வதந்தியே என்று தெரிவித்துள்ளார்.

த்ரிஷா

த்ரிஷா

த்ரிஷா விலங்குகள் பிரியை என்பதால் அவர் வழியிலேயே அவரை அசத்த திட்டமிட்டுள்ளார் வருண் மணியன்.

பட்டுன்னா போத்தீஸ்தான்

பட்டுன்னா போத்தீஸ்தான்

நிச்சயதார்த்தம் அன்று த்ரிஷா போத்தீஸ் பட்டுச்சேலை உடுத்தி என்.ஏ.சி. ஜுவல்லர்ஸ் நகைகளை அணிகிறாராம். அவர் தற்போது போத்தீஸ் மற்றும் என்.ஏ.சி. விளம்பரங்களில் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அழகு விரல்களுக்கு வைரத்தில் மோதிரம்

அழகு விரல்களுக்கு வைரத்தில் மோதிரம்

நிச்சயதார்த்தத்திற்கு த்ரிஷா, வருணுக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் அழைக்கப்பட்டுள்ளனர். அன்றைய தினம் வருண் தனது வருங்கால மனைவிக்கு பிளாட்டினத்தில் பதிக்கப்பட்ட 4.5 சாலிடெய்ர் ஹாரி வின்ஸ்டன் வைர மோதிரத்தை பரிசாக அளிக்கிறாராம்.

English summary
Varun Manian is not gifting Trisha a Rolls Royce car as their engagement gift
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil