Trisha: கட்சி கூட்டத்தில் குழந்தைகள் எதற்கு.. அரசியல் அறிவு இல்லையா? த்ரிஷாவின் ரியாக்ஷன்!

சென்னை: கரூரில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்திருந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டையே உலுக்கு இருக்கும் இந்த சம்பவம் குறித்து இளைஞர் ஓர் இதை வன்மையாக கண்டித்து பேசி உள்ளார். அந்த வீடியோ நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், கரூரில் நேற்று நடைபெற்ற விஜய் பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 39பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பல குழந்தைகள் உயிரிழந்துள்ளார்கள். கட்சி கூட்டத்தில் குழந்தைகளுக்கு என்ன வேலை, குழந்தைகளை எதற்கு கட்சி கூட்டத்திற்கு அழைத்து செல்கிறீர்கள். நீங்கள் எவ்வளவு பெரிய ரசிகராக வேண்டுமானால் இருக்கலாம், குழந்தைகளை ஏன் அழைத்து செல்கிறீர்கள். அரசியல் அறிவு கொஞ்சமாவது இருக்கணும். இன்னமும் தலைவர் பின்னாடி போய் எத்தனை உயிரை இழப்பீர்கள்.... அதற்கு இதுஎல்லாம்.. யாருக்காக இதை செய்கிறீர்கள்... உச்சத்தில் இருக்கும் நடிகர் தெருவில் சென்றால் நிச்சயம் கூட்டம் வரும். 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் சுய அறிவோடு கூட்டத்திற்கு போறீங்க, உங்களுக்கு ஓட்டுபோடும் வயசு அதனால் போறீங்க. ஆனால், குழந்தைகளை ஏன் அழைத்து செல்கிறீர்கள்.

கவனமாக இருங்கள்: அரசியல் சினிமா இல்லை என்று மக்கள் எப்போது உணர்கிறார்களோ... அப்போது தான் இது எல்லாமே மாறும். அடுத்த முறை, பெரிய கூட்டம் ஏற்படும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள். இவர்களை நேரில் பார்த்து எதுவுமே நடக்கப்போவது இல்லை. எந்த கட்சியின் தலைவராக இருந்தாலும் சரி... யாராக இருந்தாலும் சரி... நம்ப குடும்பம் ரொம்ப முக்கியம் என இணையவாசி ஒருவர் உருக்கமுடன் பேசி உள்ளார். இதற்கு பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில், நடிகை த்ரிஷா இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் ரீபோஸ்ட் செய்திருந்தார். ஆனால், சில மணி நேரத்திலேயே அதை அவர் டெலிட்செய்துவிட்டார்.

Vijay Karur Trisha

நிவாரண உதவி: தற்போது, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், உறவினை இழந்து தவிக்கும் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயை நிவாரணமாக அறிவித்துள்ளார். மேலும், இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை. அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என அந்த அறிக்கையில் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X