Don't Miss!
- News
அதே ஈரோடு.. அதே இளங்கோவன்.. யாரது? அண்ணாமலையின் "பக்கா டைமிங்".. அறியப்படாத அதிசய மனிதர் என வாழ்த்து
- Finance
ஆப்பிள் மட்டும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யாததுஏன்..?3முக்கியக் காரணம்..கூகுள்,மைக்ரோசாப்ட் ஷாக்..!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
- Sports
ஹர்திக் பாண்ட்யாவின் பேராசை? கேப்டன்சியை தவறாக பயன்படுத்தியதால் இந்தியா தோல்வியா.. குவியும் புகார்!
- Technology
பெற்றோர்களே.! உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பிள்ளைகள் உண்டா? அப்போ இந்த போன் ரூல்ஸ் பின்பற்றனும்.!
- Automobiles
அனல் பறக்கும் ஏலம்... மஹிந்திராவின் 16 லட்ச ரூபா காரை கோடிகளை கொட்டி வாங்க முந்தியடிக்கும் கோடீஸ்வரர்கள்!
- Lifestyle
அடிக்கடி சிறுநீர் கழிச்சிகிட்டே இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்க வாய்ப்பிருக்காம்!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
விஜய் எனக்கு எப்பவுமே ஸ்பெஷல்தான்.. த்ரிஷா சொன்னத பாருங்க!
சென்னை : நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் இணைந்து தொடர்ந்து 4 படங்களில் நடித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் நடிப்பில் வெளியான கில்லி படம் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட் லிஸ்டில் எப்போதுமே இடம் பிடித்திருக்கும்.
தற்போது தளபதி 67 படத்தில் விஜய்யுடன் த்ரிஷா மீண்டும் 14 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
3
கேர்ள்ஃபிரெண்ட்..
ராயல்
என்ஃபீல்ட்ல
டெலிவரி
பாய்
வேலை..
தனுஷை
பங்கமாக
கலாய்க்கும்
நெட்டிசன்கள்!

விஜய்யின் வாரிசு படம்
பீஸ்ட் படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யின் வாரிசு படம் அவரது 66வது படமாக உருவாகி வருகிறது. சென்னை, ஐதராபாத், உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடைபெற்ற நிலையில் தற்போது 4வது கட்டமாக விசாகப்பட்டினத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

லீக்கான காட்சிகள்
இந்தப் படத்திற்காக ஹார்பரில் சூப்பர் ஃபைட் சீனில் நடிகர் விஜய் பங்கேற்றார். இதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எவ்வளவு சேஃப்டி பண்ணாலும் சீன்ஸ் லீக்காகுதேப்பா என்று படக்குழுவினர் தொடர்ந்து அதிர்ச்சியை வெளியிட்டு வருகின்றனர்.

விஜய் ரசிகர்கள்
அந்த அளவிற்கு மாஸ் ஹீரோவாக விஜய் காணப்படுகிறார். அவர் நின்றால், நடந்தால் என அனைத்தையும் வைரலாக்கி வருகின்றனர் அவரது ரசிகர்கள். அந்த வகையில்தான் இந்த வீடியோவும் வெளியாகியுள்ளது. ஆனாலும் விஜய் ரசிகர்கள் தங்களது ஹீரோவின் படக்காட்சிகள் வெளியாவதை விரும்ப மாட்டார்கள். திரையரங்கில் முழுமையாக பார்க்கும் அனுபவத்தையே அவர்கள் விரும்புவார்கள்.

தளபதி 67 படம்
இதனிடையே இந்தப் படத்திற்கு பிறகு தளபதி 67 படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் இணையவுள்ளார் நடிகர் விஜய். இந்தப்படத்தின் சூட்டிங் வரும் நவம்பர் 3வது வாரத்தில் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் 6 வில்லன்கள் என்று கூறப்படுகிறது. சமந்தா மற்றும் த்ரிஷாவும் இந்தப் படத்தில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்க்கு த்ரிஷா ஜோடி?
இந்தப் படத்தில் சமந்தா வில்லியாக நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், 6 வில்லன்களில் அவரும் ஒருவரா என்றும் ரசிகர்கள் யோசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தில் த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அவர் 14 ஆண்டுகள் கழித்து தற்போது இந்தப் படத்தின்மூலம் விஜய்யுடன் இணையவுள்ளார்.

ரசிகர்களுக்கு பிடித்தமான ஜோடி
விஜய் மற்றும் த்ரிஷா ஜோடி எப்போதுமே விஜய் ரசிகர்களுக்கு பிடித்தமானது. இவர்கள் இருவரும் கில்லி, திருப்பாச்சி, ஆதி மற்றும் குருவி என 4 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக இவர்கள் நடித்த கில்லி படம் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட் படமாக அமைந்துள்ளது.

விஜய் எப்போதும் ஸ்பெஷல்தான்
இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் பேசிய த்ரிஷா, விஜய் தனக்கு எப்போதுமே ஸ்பெஷல் தான் என்று தெரிவித்துள்ளார். அவருடன் இணைந்து 4 படங்களில் நடித்துள்ளதாகவும் அவர் எப்போதுமே செட்டில் அமைதியாக இருப்பார் என்றும் ஆனால் கில்லி படக்குழுவினரால் தாங்கள் இருவரும் சிறப்பான ப்ரெண்ட்சாக மாறியதாகவும் அவர் கூறியுள்ளார்.
Recommended Video

விஜய்யின் ப்ரொபஷனலிசம்
அவர் தனது படங்களுக்காக மெனக்கெடுவது அவரது ப்ரொபஷனலிசம் ஆகியவை தன்னை எப்போதுமே கவர்ந்து வருவதாகவும் த்ரிஷா மேலும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய படங்கள் சிறப்பாக அமைவதற்காக அவர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதும் தான் வியக்கும் விஷயங்களில் ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார்.