»   »  மாங்கல்யம் தந்துனானே.. ஏரோப்ளேனில் கேக்குதே.. பறக்கும் விமானத்தில் திரிஷாவின் கல்யாணம்?

மாங்கல்யம் தந்துனானே.. ஏரோப்ளேனில் கேக்குதே.. பறக்கும் விமானத்தில் திரிஷாவின் கல்யாணம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திரிஷா - வருண் மணியன் திருமணம் பறக்கும் விமானத்தில் நடக்கப் போவதாக செய்திகள் உலா வருகின்றன.

நடிகை திரிஷாவிற்கு வரும் 23ஆம் வருண் மணியனுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. இந்த தகவலை அவரே அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வழியாக அறிவித்து விட்டார்.

திருமணம் எப்போது?

திருமணம் எப்போது?

அதேசமயம் மார்ச் மாதம் திருமணம் நடைபெறும் என்று வெளியாகியுள்ள தகவலை திரிஷா மறுத்துள்ளார். ஜனவரி 23ம் தேதி வருண் மணியனுடன் எனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது. எளிமையாக நடக்க உள்ள இந்நிகழ்ச்சியில் இருவீட்டாரும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்கின்றனர். எனது திருமண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அப்படி முடிவு செய்தால் அதை நானே முதலில் தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார் திரிஷா.

தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு

தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு

திரிஷாவின் இந்த அறிவிப்புக்கு காரணம் தயாரிப்பாளர்கள்தானாம். திருமணத்தால் படம் பாதிக்குமே என்று தயாரிப்பாளர்கள் கருதவே, நடிப்புக்கு முழுக்குபோடும் எண்ணமும் எனக்கில்லை. இன்னும் சொல்லப்போனால் விரைவில் 2 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆக உள்ளேன்' எனவும் திரிஷா குறிப்பிட்டிருக்கிறார்.

ரிலீசுக்கு தயார்

ரிலீசுக்கு தயார்

அஜீத் ஜோடியாக ‘என்னை அறிந்தால்', ஜெயம் ரவி ஜோடியாக ‘பூலோகம்' என திரிஷா நடிக்கும் 2 படங்கள் ரிலீஸுக்கு தயாராகிவிட்ட நிலையில் அவர் திருமண செய்தியால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனராம்.

படத்திற்கு பாதிப்பா?

படத்திற்கு பாதிப்பா?

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே திருமணம் நடந்தால் படத்துக்கு பாதிப்பு ஏற்படும். எனவே உடனே திருமணம் நடக்க தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். திருமணத்தை தள்ளி வைத்துக்கொள்ளுங்கள் என்று திரிஷாவிடம் கூறியுள்ளனர்.

விமானத்தில் திருமணம்

விமானத்தில் திருமணம்

தயாரிப்பாளர்களின் எதிர்ப்பையடுத்து மார்ச் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த திருமணத்தை சில மாதங்களுக்கு தள்ளிவைப்பது பற்றி திரிஷாவின் குடும்பத்தினர் ஆலோசித்து வருகிறார்களாம். வருண்மணியன் மிகப்பெரிய பணக்காரர் என்பதால் பறக்கும் விமானத்தில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மெகா பார்ட்டி

மெகா பார்ட்டி

இதனிடையே ஜனவரி 23ஆம் தேதி திருமண நிச்சயதார்த்த தினத்தன்று திரிஷாவிற்கு விலையுயர்ந்த பரிசு கொடுக்கிறார் வருண் மணியன். நிச்சயத்திற்கு மறுநாள் திரையுலக நட்சத்திரங்களுக்கு மிகப்பெரிய விருந்து கொடுக்கிறாராம் திரிஷா.

English summary
Ending days of speculations about her marriage that has been going around in film industry, popular south Indian actress Trisha Krishnan is all set to tie the knot with industrialist Varun Manian and the engagement is scheduled to take place this month.
Please Wait while comments are loading...