»   »  மனோபாலா தயாரிப்பில் அரவிந்த்சாமி- த்ரிஷா நடிக்கும் 'சதுரங்கவேட்டை- 2'

மனோபாலா தயாரிப்பில் அரவிந்த்சாமி- த்ரிஷா நடிக்கும் 'சதுரங்கவேட்டை- 2'

Posted By:
Subscribe to Oneindia Tamil

த்ரிஷாவுக்கு நாயகி பெரும் ஏமாற்றமாக அமைந்தாலும், அடுத்தடுத்து புதுப்படங்கள் அமைந்து ஆறுதல் தருகின்றன.

அடுத்து மீண்டும் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

Trisha signs Sathuranga Vettai 2

2014ம் ஆண்டு மனோபாலா பிக்சர் ஹவுஸ் தயாரிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் நட்ராஜ் நடித்து வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'சதுரங்க வேட்டை'.

நம்மைச் சுற்றி நமக்கே தெரியாமல் நம் அறியாமையை பயன்படுத்தி எவ்வாறெல்லாம் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதனை தெளிவாகவும் வியக்கும்படியும் 'சதுரங்கவேட்டை' படத்தில் கூறியிருந்தார்கள்.

வட, தென்மாவட்டங்களில் நடைபெறும் ஏமாற்று வேலைகளைப் பற்றி விவரித்தது சதுரங்க வேட்டை திரைப்படம். தற்போது தினம் தினம் மெருகேறியவரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நகரவாழ் மக்களை தங்களது சிலந்தி வலையில் சிக்கவைத்து எவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்பதனை தெளிவாகவும் விவரமாகவும் 'சதுரங்க வேட்டை 2' படத்தில் கூறவுள்ளார்கள்.

மனோபாலாவின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் பெரும்பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கிறது.

சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய ஹெச் வினோத் சதுரங்கவேட்டை 2 படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதுகிறார்.

சலீம் படத்தை இயக்கிய என் வி நிர்மல்குமார் இப்படத்தை இயக்குகிறார்.

அரவிந்த்சாமி கதாநாயகனாகவும், த்ரிஷா கதாநாயகியாகவும் நடிக்க இவர்களுடன் நாசர், ராதாரவி, ஸ்ரீமன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

English summary
Trisha has signed another biggie, the sequel of blockbuster Sathuranga Vettai with Arvindsamy in lead.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil