கமலுடன் மீண்டும் ஜோடி சேரும் த்ரிஷா... எந்த படம்னு தெரிஞ்சா அசந்துடுவீங்க

சென்னை : தமிழ், தெலுங்கு திரையலகில் பலரின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வருபவர் த்ரிஷா. கடந்த 20 ஆண்டுகளில் கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு என டாப் ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார் த்ரிஷா.

சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார் த்ரிஷா. இந்த படத்தில் குந்தவை என்ற முக்கிய கேரக்டரில் தான் த்ரிஷா நடித்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் கமலுக்கு ஜோடி

மீண்டும் கமலுக்கு ஜோடி

த்ரிஷா, கமலுடன் இணைந்து மன்மதன் அம்பு, தூங்காவனம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக தற்போது மூன்றாவது முறையாக கமலுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளாராம் த்ரிஷா. விரைவில் இந்த படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளது.

விரைவில் இந்தியன் 2 ஷுட்டிங்

விரைவில் இந்தியன் 2 ஷுட்டிங்

டைரக்டர் ஷங்கர், லைகா நிறுவனம் இடையேயான பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டதால் இந்தியன் 2 பட ஷுட்டிங் விரைவில் துவங்கப்பட உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டது. லேட்டஸ்ட் தகவலின் படி டிசம்பர் 15 ம் தேதி இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங் மீண்டும் துவங்கப்பட உள்ளதாம். மீதமுள்ள காட்சிகளை விரைவில் எடுத்து முடிக்க போகிறார்களாம்.

விலகிய காஜல் அகர்வால்

விலகிய காஜல் அகர்வால்

கர்ப்பம், குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆக போகிறார் போன்ற வதந்திகளால் இந்தியன் 2 படத்தில் இருந்து காஜல் அகர்வால் விலகி உள்ளதாக கூறப்பட்டது. வயதான கமலுக்கு ஜோடியாக நடித்து வந்த காஜல் அகர்வால், போலீஸ் கேரக்டரில் நடித்த வந்த விவேக் ஆகியோரின் கேரக்டர்கள் மாற்றப்பட உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டது.

காஜலுக்கு பதில் த்ரிஷா

காஜலுக்கு பதில் த்ரிஷா

இந்நிலையில் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ள தகவலின்படி, இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் த்ரிஷாவை நடிக்க வைக்க டைரக்டர் ஷங்கர் முடிவு செய்திருக்கிறாராம். விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாம். ஷங்கர் படத்தில் த்ரிஷா நடிப்பது இது தான் முதல் முறை.

உயரும் த்ரிஷா மார்க்கெட்

உயரும் த்ரிஷா மார்க்கெட்

பொன்னியின் செல்வன், இந்தியன் 2 என அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தமாகி வருவதால் மீண்டும் அவர் மார்க்கெட் உயர துவங்கி உள்ளதாம். பல டைரக்டர்கள் தங்கள் படங்களிலும் த்ரிஷாவை நடிக்க வைப்பது பற்றி யோசித்து வருகிறார்களாம். இந்தியன் 2 படத்தில் த்ரிஷா நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் பட்சத்தில் அவரின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X