»   »  ஹே டிரம்ப், தூங்கி முழிச்சாச்சா?: கலாய்த்து டிவீட்டிய ஆஸ்கர் விழா தொகுப்பாளர்

ஹே டிரம்ப், தூங்கி முழிச்சாச்சா?: கலாய்த்து டிவீட்டிய ஆஸ்கர் விழா தொகுப்பாளர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழாவை நடத்திய ஜிம்மி கெம்மல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை கிண்டல் செய்து ட்வீட்டியுள்ளார்.

89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. ஜிம்மி கெம்மல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியை துவங்கியபோதே ஜிம்மி அமெரிக்க அதிபர் டிரம்பை விமர்சித்து பேசினார்.

வெறுப்பு

ஆஸ்கர் விருது விழா நிகழ்ச்சி 225க்கும் மேலான நாடுகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் அனைத்து நாடுகளும் நம் அமெரிக்காவை வெறுக்கின்றன என்றார் ஜிம்மி.

ஆஸ்கர்

அதிபர் டிரம்புக்கு நன்றி சொல்கிறேன். கடந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் இனவாதம் தலைதூக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டு தற்போது இல்லை டிரம்புக்கு நன்றி என்று ஜிம்மி கிண்டல் செய்துள்ளார்.

ட்வீட்

பார்வையாளர்கள் கூட்டத்தில் உள்ளவர்களில் சிலர் மேடைக்கு வந்து பேசுங்கள். நீங்கல் பேசியதை அதிபர் டிரம்ப் காலை 5 மணிக்கு காலைக் கடனை கழிக்கும்போது ட்வீட்டுவார் என்று ஜிம்மி கூற அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது.

டிரம்ப்

ஆஸ்கர் விருது விழா துவங்கியதில் இருந்தே டிரம்பை விமர்சித்து வரும் ஜிம்மி ட்விட்டரில், டிரம்ப் கண் விழித்துவிட்டீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
Jimmy Kemmel who is the host of 89th Oscar award function takes a dig at the US president Trump by tweeting, 'Hey realDonaldTrump u up?'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil